சைவ உணவக விவகாரம் - ஒரே நாளில் பல்டி அடித்த தமிழக அரசு

சாலையோர உணவகங்களில் சைவ உணவு மட்டுமே உணவாக வழங்ப்பட வேண்டும் என உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2023, 09:28 AM IST
  • சாலையோர உணவக அரசாணையை திரும்பப்பெற்றது தமிழக அரசு
  • சைவ உணவு மட்டுமே சமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது
  • புதிய அரசாணையில் சைவ உணவு என்ற வார்த்தை நீக்கம்
சைவ உணவக விவகாரம் - ஒரே நாளில் பல்டி அடித்த தமிழக அரசு title=

தமிழ நெடுஞ்சாலையோரம் இருக்கும் உணவகங்கள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. உணவுகளில் தரம் இல்லை, கழிவறைகளுக்கு கட்டணம் வசூலிப்பதுடன், அவற்றை சுகாதாரமாக பராமரிப்பதில்லை என்ற தொடர்ச்சியான புகார்கள் எழுந்தன. இந்த புகார்களை கவனத்தில் கொண்ட தமிழக அரசு, சாலையோர உணவகங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுகளை கொண்ட உத்தரவை வெளியிட்டது. 

மேலும் படிக்க | பிற மாநில பேருந்து கட்டணத்தை காட்டிலும் தமிழக பேருந்துகளில் கட்டணம் குறைவு

அதில், சாலையோர உணவகங்களில் சுகாதாரமான மற்றும் தரமான உணவுகள் வழங்கப்பட வேண்டும் என கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தது. கழிவறைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என உத்தரவிட்ட தமிழக போக்குவரத்துறை, சைவ உணவுகளை மட்டுமே சமைக்க வேண்டும் என கூறியிருந்தது. இந்த உத்தரவு கடும் சர்ச்சையைக் கிளப்பியது. சைவ உணவு மட்டுமே சாலையோர உணவகங்களில் சமைக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு வலியுறுத்தின.

உணவு தொடர்பான இந்த உத்தரவு தனிநபர் உணவு விருப்பத்தில் தலையிடுவது போன்றது என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், பழைய உத்தரவை திரும்ப பெற்றுள்ள தமிழக அரசு, உணவுகள் சுகாதரமாகவும், தரமாகவும் இருக்க வேண்டும் என புதிய அரசாணையில் தெரிவித்துள்ளது. அதாவது பழைய அரசாணையில் குறிபிட்டிருந்த சைவ உணவு என்ற வார்த்தையை நீக்கி, புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க | ரூ.48,000 கோடி நஷ்டத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்..!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News