பரபரப்பான சூழலில் இன்று தமிழகம் வந்தார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
அதிமுக-வின் இபிஎஸ் அணியும், ஓபிஎஸ் அணி ஒன்றாக இணைந்ததை அடுத்து, அதிமுக துணை பொதுச்செயலார் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி கடிதம் ஒன்றை சமர்பித்தனர்.
மேலும் முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் தரப்பில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறிவருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகம் வருகிறார். ஆளுநர் வருகையொட்டி, அடுத்து தமிழக அரசியலில் என்ன நடக்கும் என மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.