TN சட்டசபை கூட்டம் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு....

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு....

Last Updated : Jan 2, 2019, 12:54 PM IST
TN சட்டசபை கூட்டம் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு.... title=

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 8ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு....

10:26 |  30-January-2018

திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் பொங்கலை கொண்டாட ஒரு குடும்பத்துக்கு ரூ.1000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரை....


10:15 | 30-January-2018

ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் வெளிநடப்பு. கஜா புயல் நிவாரணம், ஹெச்ஐவி ரத்த விவகாரம், ஸ்டெர்லைட் உள்ளிட்டவை குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக - காங். வெளிநடப்பு..


10:05 | 30-January-2018

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு...


10:00 | 30-January-2018

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது! 


2019-ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.

இந்த உரையில் தமிழக அரசின் கொள்கை முடிவின்படி பல்வேறு புதிய திட்டங்கள், சலுகைகள் இடம் பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட கஜா புயலின் காரணமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சலுகைகள் பற்றி கவர்னர் உரையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று கருதப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் கஜா புயலால் உயிரிழந்த 62 பேரின் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றபட்டு சட்டசபை ஒத்தி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

நாளை கவர்னர் உரை முடிந்தவுடன் அலுவல் ஆய்வு கூடி அவை எத்தனை நாட்கள் நடத்தவது என முடிவு எடுக்கும், அதன் பின்னர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெறக் கூடும் என்றும், இறுதி நாளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளிப்பார் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் சட்டசபை கூட்டம் நிறைவறையும்.

ஸ்டெர்லைட் விவகாரம், கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம், கஜா புயல் பாதிப்பு, மேகதாது அணை விவகாரம், ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

 

Trending News