“பதற்றத்தை உருவாக்க பாஜக திட்டமிட்டு முயற்சிக்கிறது” - திருமாவளவன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்க பாஜக திட்டமிட்டு முயற்சி செய்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 20, 2022, 04:20 PM IST
  • பாஜக மீது திருமாவளவன் குற்றச்சாட்டு
  • செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்
  • மயிலாடுதுறை சென்ற திருமாவளவன்
“பதற்றத்தை உருவாக்க பாஜக திட்டமிட்டு முயற்சிக்கிறது” - திருமாவளவன் குற்றச்சாட்டு title=

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான தொல். திருமாவளவன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மயிலாடுதுறைக்கு வருகை தந்தார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாஜக மீது குற்றச்சாட்டினை வைத்தார். அவர் பேசுகையில், “பாஜகவைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு ஒரு பதற்றத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். அக்கட்சியினர் வன்முறையை தூண்டுவதற்கு திட்டமிட்டு செயல்படுகின்றனர். அனைத்து தரப்பினராலும் பாராட்டப் படக்கூடிய அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. 

அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலமாக தமிழ்நாட்டில் வேர் ஊன்ற வேண்டும் என பாஜகவினர் திட்டமிடுகின்றனர். அக்கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் தங்கள் கட்சியை சேர்ந்தவர்களை ஆளுநராக நியமித்து வருகின்றனர்.

H Raja

அவர்கள் மூலம் மத வெறுப்பை ஊக்கப்படுத்துவது, மத அடிப்படையிலான பிரிவினையை உறுதிப்படுத்துவதற்கு முயல்கிறது. அந்த அடிப்படையில்தான் ஹெச்.ராஜாவை கேரள ஆளுநராக நியமிக்க பாஜக முயல்வதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ‘சைக்கோ கணவனால்’ கழுத்து நெரித்து கொல்லப்பட்ட மனைவி..!

இலங்கைக்கு இந்திய அரசு ஏற்கனவே பல ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்துள்ளது. அந்த உதவி இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழுமையாக கிடைப்பதை இந்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க | ஆளுநரின் பாதுகாப்பிற்கு இடையூறு நேர்ந்திருந்தால் கண்டிக்கதக்கது! எம்.பி கார்த்தி சிதம்பரம் கருத்து!

இலங்கையில் தவிக்கும் தமிழர்கள் மற்றும் சிங்களர்களுக்கு உதவிகள் செய்வதற்கு தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News