சைக்கில் பிரியர்களின் கவனத்தை ஈர்த்த "சிட்டி பைக்" மர சைக்கில்!!

சுற்றுசூழல் மாசுபாட்டை தடுக்கும் விதமாக மரத்திலான மிதிவண்டியை கோவை சேர்ந்த முருகேசன் என்பவர் வடிவமைத்துள்ளார்! 

Last Updated : Jun 4, 2018, 06:57 PM IST
சைக்கில் பிரியர்களின் கவனத்தை ஈர்த்த "சிட்டி பைக்" மர சைக்கில்!!  title=

சுற்றுசூழல் மாசுபாட்டை தடுக்கும் விதமாக மரத்திலான மிதிவண்டியை கோவை சேர்ந்த முருகேசன் என்பவர் வடிவமைத்துள்ளார்! 

சமீப காலமாக நமது வாழ்க்கை முறையானது மாறிக்கொண்டே வருகிறது. அன்றாட பழக்கத்தில் இருந்த அனைத்து பலக்கனகளையும் மாற்றி நாம் அதிநவீன காலத்திற்கு தள்ளபட்டிருகின்றோம். 

தற்கால தேவைகளுக்கு ஏற்ப நாம் நமது வாழ்கை முறைகளையும் மாற்றி வருகின்றோம். போக்குவரத்தில் நாளுக்கு நாள் மோட்டர் வாகன பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதிலிருந்து வரும் வெளிவரும் புகையால் சுற்றுசூழல் மாசுபட்டு வருகிறது. 

நாம் சுவாசிக்கும் கற்று கூட சுத்தமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வரும் காலங்களில் நாம் அனைவரும் கையில் தொலைபேசி வைத்திருப்பது போன்று, இனி வரும் காலங்களில் கையில் சுத்தமான கற்றை சுவாசிக்க சிலிண்டருடன் தான் நடமாட போகிறோம் என்று தெரிகிறது. 

இந்நிலையில், சுற்றுசூழல் மாசுபாட்டை தடுக்க அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் நாம் கைடைபிடிப்பதும் இல்லை. சுற்றுசூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு கோவையை சேர்ந்த இண்டீரியர் டிசைனரான முருகேசன் என்ற இளைஞன் மரத்தால் ஆன சைக்கில் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

சைக்கிள் பயன்பாட்டைக் அதிகாரிக்கும் விதமாகவும், சுற்றுசூழல் மாசைக் தடுக்கும் விதமாகவும் இவர் மரத்திலான சைக்கிளை இவர் வடிவமைத்துள்ளார்.

இது பற்றி இவர் கூறிய போது..! 

நாம் எப்போது வழக்கமாக எங்கு சென்றாலும் சைக்கிளில் செல்வேன். அப்படி ஒருநாள் சென்று கொடிருந்த போது விபத்துகுள்ளனத்தில் அவருக்கு மிகவும் பிடித்த சைக்கில் சேதமடைந்தது. இதையடுத்து தான் அவர் மரத்தாலான சைக்கில் ஒன்றை வடிவமைக்க உந்துகோலாக உள்ளது. 

மேலும், சுற்றுசூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு இந்த மரத்தாலான சைக்கிளை வடிவமைத்தேன். இந்த மிதிவண்டிக்கு நான் இட்ட பெயர் "சிட்டி பைக்". இதில் பிளாஸ்டிக் கெமிக்கல் பூச்சைக் முற்றிலும் தவிர்த்துள்ளாதாகவும் தெரிவித்துள்ளார் முருகேசன். 

மேலும், இன்ஜினியரிங் வுட் என்று அழைக்கப்படும் பிளைவுட்டுகளைக் பயன்படுத்தி மர சைக்கிளைக் வடிவமைத்துள்ளாதாகவும் முருகேசன் தெரிவித்துள்ளார். இலகுவான எடையில் பயணத்திற்கு ஏற்றதாகவும் வடிவமைத்துள்ளார். அதுமட்டுமின்றி "சிட்டி பைக்" தயாரிப்பதற்காக செலவும் குறைவுதான் என்று முருகேசன் முருகேசன் தெரிவித்துள்ளார்.

 

Trending News