வானிலை முன்னறிவிப்பு: இந்த வருடம் மழை இயல்பைவிட 55% குறைவு....

வடகிழக்கு பருவமழை பதிவான அளவு 34 செ.மீ. இது வழக்கத்தைவிட 24 சதவிகிதம் குறைவு.....

Last Updated : Dec 31, 2018, 03:22 PM IST
வானிலை முன்னறிவிப்பு: இந்த வருடம் மழை இயல்பைவிட 55% குறைவு.... title=

வடகிழக்கு பருவமழை பதிவான அளவு 34 செ.மீ. இது வழக்கத்தைவிட 24 சதவிகிதம் குறைவு.....

வடகிழக்கு திசையில் இருந்து வீசும் பருவக்காற்று காரணமாக தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரையான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் 7 சென்டிமீட்டரும், பாபநாசத்தில் 4 சென்டி மீட்டரும், கோவை மேட்டுப்பாளையத்தில் 3 சென்டிமீட்டரும் மழை  பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை பதிவான அளவு 34 செ.மீ. இது வழக்கத்தைவிட 24 சதவிகிதம் குறைவு என தெரிவித்துள்ளது. மேலும், வானிலை நிகழ்வுகள் சாதகமாக இல்லாததே பருவமழை குறைவுக்கு காரணம். எல் நினோ உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது; இது தள்ளிப்போனதால் மழை இல்லை என தெரிவித்துள்ளது. சென்னையில் இயல்பைவிட 55% மழை குறைவாக பதிவாகியுள்ளது எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ்-ம் குறைந்தபட்ச வெப்பநிலையாக 21 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

Trending News