தமிழகத்தில் சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!
17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், குமரி, நெல்லை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது.... தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை மழை பெய்யக்கூடும்.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை (ஜூன் 2) புயலாக வலுவடைந்து மேற்குக் கடற்கரையை ஒட்டி வடக்கு திசையில் நகரும். இதன் காரணமாக தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் லட்சத்தீவு மற்றும் கேரள கடலோர பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே மணிக்கு 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இதனிடையே இந்திய வானிலை மையம், ‛அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. காற்றலுத்தத் தாழ்வு மண்டலம் வடகிழக்கு திசையை நோக்கி நகரும். புயலாக மாறினால் அது 'நிசர்கா' என அழைக்கப்படும்,' எனத் தெரிவித்திருந்தது. தென்மேற்கு பருவமழையின் அறிகுறியாக கேரளாவில் திருவனந்தபுரம் உள்பட பல இடங்களில் கனமழை பெய்தது.
கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம் மற்றும் கண்ணூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.