முதல்வர் பங்குகொண்ட விழாவில் கலந்துகொண்ட வருவாய் அதிகாரிக்கு தொற்று உறுதி: குழப்பத்தில் அதிகாரிகள்!!

வியாழக்கிழமை வாணியம்பாடியில் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற வருவாய் அதிகாரி ஒருவரது COVID-19 பரிசோதனை முடிவு, நேர்மறையாக வந்ததை அடுத்து திருப்பத்தூரில் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 22, 2020, 02:23 PM IST
  • முதல்வரை சந்தித்த ஒரு நாள் கழித்து அதிகாரிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • வேலூரில் நடந்த விழாவுக்குப் பிறகு முதல்வர் தனது குழுவுடன் தர்மபுரிக்குச் சென்றார்.
  • வேலூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வாணியம்பாடியின் பெருமாள்பேட்டையில் முதல்வருக்கு ஒரு வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
முதல்வர் பங்குகொண்ட விழாவில் கலந்துகொண்ட வருவாய் அதிகாரிக்கு தொற்று உறுதி: குழப்பத்தில் அதிகாரிகள்!! title=

வேலூர்: வியாழக்கிழமை வாணியம்பாடியில் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமிக்கு (K Palanisamy) அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற வருவாய் அதிகாரி ஒருவரது COVID-19 பரிசோதனை முடிவு, நேர்மறையாக வந்ததை அடுத்து திருப்பத்தூரில் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர். முதல்வரை சந்தித்த ஒரு நாள் கழித்து அந்த அதிகாரிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல்வரின் விழாவில் பங்கேற்கவிருந்த வேலூரைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட அதிகாரிகள், விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சோதனை செய்யப்பட்டனர். இதேபோல், சுய உதவிக்குழுக்கள், தொழில்துறை அமைப்புகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வுக்கு முன்னர் சோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். நிகழ்வுக்கு முன்னரே அவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொண்டனர். அதனால், முன்னரே அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்க வசதியாக இருக்கும் என முடிவெடுக்கப்பட்டது.

ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு, அவரது சோதனை முடிவுகள் எதிர்மறையாக இருப்பதாக அவர் விழாவில் கலந்துகொண்டிருந்த போது எஸ்எம்எஸ் வந்தது. அதேபோல், ஒரு விவசாயிகள் சங்கத் தலைவர் கோவிட் பரிசோதனை செய்துகொள்ளாததால் அவர் விழாவுக்கு அழைக்கப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், வேலூர் (Vellore) விழாவில் கலெக்டரைத் தவிர வேறு எந்த அதிகாரியும் பங்கேற்காததால், இதே நடைமுறையை திருப்பத்தூர் (Tirupattur) அதிகாரிகள் பின்பற்றவில்லை.

ALSO READ: சென்னை முதல் குமரி வரை மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்!!

வேலூரில் நடந்த விழாவுக்குப் பிறகு முதல்வர் தனது குழுவுடன் தர்மபுரிக்குச் சென்றபோது, ​​ வேலூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வாணியம்பாடியின் (Vaniyampadi) பெருமாள்பேட்டையில் அவருக்கு ஒரு வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கெடுத்த ஒரு வருவாய் துறை அதிகாரி, ஆகஸ்ட் 19 ம் தேதி தனது மாதிரியை சோதனைக்கு வழங்கியிருந்தார். அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.

அவரது குடும்ப உறுப்பினர்களின் சோதனைகளும் நேர்மறையாக வந்துள்ளதால், அவர்கள் வாணியம்பாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் எம்.பி. சிவன் அருள் தெரிவித்தார். இது குறித்து முதல்வரின் குழுவுக்கு தெரிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு, “அருகிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் உள்ள கோவிட் பராமரிப்பு மையத்திற்கு சென்ற பிறகு அந்த வருவாய் அதிகாரி அங்கு வந்ததாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. எனவே அந்த விழாவில் அவர் முழுமையாக பங்கேற்கவில்லை. ஆனால் இந்த விவகாரத்தின் முழு விவரத்தையும் அறிந்து கொள்ளுமாறு அதிகாரிகளை நான் கேட்டுக்கொண்டுள்ளேன். அதன் அடிப்படையில், தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

ALSO READ: கேரள நிலச்சரிவில் இறந்த தமிழக தேயிலைத் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு நிதி உதவி: EPS

Trending News