பகவானின் பாசப் போராட்டம் வெற்றி! பணியிட மாறுதல் ரத்து!

திருவள்ளூர் வெள்ளியகரம் அரசுப்பள்ளி ஆசிரியர் பகவானின் பணியிடமாறுதலை கல்வித்துறை ரத்து செய்துள்ளது!

Last Updated : Jun 26, 2018, 01:58 PM IST
பகவானின் பாசப் போராட்டம் வெற்றி! பணியிட மாறுதல் ரத்து!

திருவள்ளூர் வெள்ளியகரம் அரசுப்பள்ளி ஆசிரியர் பகவானில் பணியிட மாறுதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் வெளியகரம் பள்ளியிலேயே பணியில் தொடர கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகில் வெள்ளியகரம் பகுதியில் இயங்கிவரும் அரசு உயர் நிலைப்பள்ளியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகள் பயின்று வருகின்றனர். 

இந்த பள்ளியில், ஆங்கில ஆசிரியராக இருக்கும் பகவான் திருத்தணி அருங்குளம் பள்ளிக்கு பணியிட மாறுதல் பெற்றிருந்தார். இதையடுத்து, அவர் பணி மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு செல்லக் கூடாது என மாணவர்களும் பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து, பணிமாறுதல் பெற வந்த ஆசிரியர் பகவானை மாணவர்கள் சூழ்ந்து கொண்டு மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டு அழுதது காண்போரை மனம் உருகச் செய்தது. எனவே, இவருடைய பணியிடை மாற்றம் நிறுத்திவைக்கப்பட்டு அதிகாரிகள் ஆய்வு பணி மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில், ஆசிரியர் பகவான் வெளியகரம் பள்ளியிலேயே பணியில் தொடர கல்வித் துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

More Stories

Trending News