TN Assembly polls: தமிழக சட்டசபை தேர்தலில் NOTA இன் பங்கு!

தமிழ்நாட்டில், 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது நோட்டா முதன்முதலில் ஒரு விருப்பமாகக் காணப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 5, 2021, 08:29 AM IST
TN Assembly polls: தமிழக சட்டசபை தேர்தலில் NOTA இன் பங்கு! title=

தமிழக சட்டமன்ற தேர்தல் (TN Assembly Election) வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக (AIADMK), திமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. டிவி சேனல்களில் வீடியோ மூலம் பிரச்சாரம், சமூக வலைதளங்கள், வீடு வீடாகச் சென்று நேரடி பிரச்சாரம், பொதுக் கூட்டங்கள், வாகனப் பிரச்சாரம் என தேர்தல் களம் காட்சியளிக்கிறது. 

ஆனால் பிரச்சாரத்தின்போது ஒருபோதும் செயல்படாத ஒரு விஷயம் இருக்கிறது, அது தான் நோட்டா. யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனில் NOTA என்ற அம்சமும் இடம்பெற்றிருக்கும். அதாவது ஒரு வாக்காளர் தன் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்குமே வாக்களிக்க விருப்பமில்லையென்றால், 'நோட்டா' (None of the above - NOTA) என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யலாம். இதன் மூலம் எந்த வேட்பாளரும் (Candidates) தங்களை ஆளத் தகுதியானவர் இல்லை என்ற எதிர்ப்பை மக்கள் பதிவு செய்கின்றனர்.

ALSO READ | அரியலூர் மாணவி அனிதா வீடியோ பதிவு சர்ச்சை, அதிமுக அமைச்சர் மீது மோசடி புகார்

2013 ஆம் ஆண்டில், PUCL Vs யூனியன் ஆஃப் இந்தியா தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நோட்டாவைப் பயன்படுத்த அனுமதித்தது. 2013 ஆம் ஆண்டில் சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலின் (Assembly Election) போது நோட்டா விருப்பம் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் (TN Assembly Election), நோட்டா முதன்முதலில் 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது ஒரு விருப்பமாகக் காணப்பட்டது மற்றும் தமிழகத்தின் நீலகிரி தொகுதியில் 3.6 சதவீதத்தில் நோட்டா அதிக வாக்குகளைப் பெற்றது. ஒதுக்கப்பட்ட தொகுதியில், 36.45% வாக்குகளை அதிமுகவின் ஆர் கோபாலகிருஷ்ணன் பெற்றார், மேலும் திமுகவின் ஏ ராஜாவை 8% வித்தியாசத்தில் வென்றார்.

தமிழகத்தில் சில தேசிய கட்சிகள் நோட்டாவை விட குறைவான வாக்குகளைப் பெறும் போது, அதனை மையமாக வைத்து மீம்ஸ்களை நெட்டிசன்கள் தெறிக்கவிடுவர். நோட்டாவை பொறுத்தவரை அதற்கான வலிமையை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்ற பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

2016 சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 25 வேட்பாளர்களின் வெற்றி வித்தியாசத்தை நோட்டா பாதித்துள்ளது. கடந்த தேர்தல்களில் நோட்டா வகித்த பங்கு மற்றும் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் அது என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை TNM உன்னிப்பாகக் கவனிக்கிறது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News