பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆலோசிப்பதற்காக, இன்று தமிழக அமைச்சரவை கூடுகிறது.
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதுதொடர்பாக தமிழக அரசு என்ன முடிவு எடுக்கும் என எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இன்று மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அக்கூட்டத்தில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு பரிந்துரைப்பது குறித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், பல்வேறு முக்கிய முடிவுகளும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், இன்றைய தமிழக அமைச்சரவைக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். க்யூ.ஆர் கோடு மூலம் பாடம் நடத்த மட்டுமே அனுமதி; வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கை பயன்படுத்தினால் நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.