புதுடெல்லி: பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் அரசு கோல்டன் விசாவை (Golden Visa) வழங்கியுள்ளது. கோல்டன் விசா என்றால் என்ன? சில குறிப்பிட்ட நபர்களுக்கு நீண்ட கால குடியுரிமையை வழங்குவதுதான் கோல்டன் விசா எனப்படும்.
ஐக்கிய அரபு அமீரகத்தைப் (UAE) பொறுத்தவரையில், அங்குள்ள அரசாங்கம், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் கொண்ட பிரகாசமான மாணவர்கள் மற்றும் அறிவியல் மற்றும் அறிவியலின் பல்வேறு துறைகளில் தனிப்பட்ட மற்றும் சிறப்பான திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு கோல்டன் விசாக்களை வழங்குகிறது.
Honoured to have received a golden visa for the UAE in the presence of Major General Mohammed Al Marri, Director General of @GDRFADUBAI. Thanking him along with the @uaegov for the honour. Also grateful to Mr. Hamad Obaidalla, COO of @flydubai for his supportpic.twitter.com/b2Qvo1Bvlc
— Sanjay Dutt (@duttsanjay) May 26, 2021
ஐக்கிய அரபு அமீரகம் 2019 ஆம் ஆண்டில் கோல்டன் விசாவை அமல்படுத்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா (Visa) இருக்கும் வெளிநாட்டவர்கள், ஒரு தேசிய ஆதரவாளரின் தேவையின்றி, அங்கு தங்கலாம், படிக்கலாம், பணிபுரியலாம்.
மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய இடங்களில் இருக்கும் வியாபாரங்களில் 100 சதவிகித உரிமையை அனுபவிக்க முடியும். இந்த விசாக்கள் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் மற்றும் தானாகவே புதுப்பிக்கப்படும்.
ALSO READ: கொரோனா பரவல்: இந்தியா மீதான பயண தடையை UAE நீட்டித்துள்ளது
ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் விதித்துள்ள விதிகளின் கீழ் உள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்பவர்கள் 10 ஆண்டு விசா, 5 ஆண்டு விசாவைப் பெற முடியும்.
கோல்டன் விசா - 10 ஆண்டு விசா
துபாயில் 10 ஆண்டு குடியிருப்பு விசாவைப் பெற, ஒரு முதலீட்டாளர் AED 10 மில்லியன் பொது முதலீடு செய்ய வேண்டும்.
முதலீட்டாளர் முதலீடு செய்த தொகை கடனாக இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
முதலீட்டை குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
5 ஆண்டு விசாவிற்கு, 10 ஆண்டுக்கான விதிமுறைகள் பெரும்பாலும் ஒத்திருக்கின்றன. ஒரே வித்தியாசம் என்னவென்றால், தேவையான முதலீட்டின் அளவு AED 5 மில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மிகவும் சிறப்பான திரமையைக் கொண்ட உயர்நிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் 5 ஆண்டு வதிவிட விசாவிற்கு தகுதி பெற்றுள்ளனர். நாட்டில் முதலிடம் வகிக்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் (குறைந்தபட்ச தரம் 95 சதவீதம்) மற்றும் 3.75 அல்லது அதற்கு மேற்பட்ட ஜி.பி.ஏ கொண்ட சில பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதற்கு தகுதி பெறுகிறார்கள்.
ALSO READ: வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாக்களை அமெரிக்கா ரத்து செய்கிறது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR