பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு மே 3 முதல் விண்ணப்பிக்கலாம்

பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு மே 3 முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. 

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Apr 23, 2018, 03:52 PM IST
பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு மே 3 முதல் விண்ணப்பிக்கலாம்
Zee Media

இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கான (பி.இ., பி.டெக்) ஆன்லைனில் நடைபெறுகிறது.

இதுக்குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியதாவது:-

  • இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் 567 கல்லூரிகள் பங்கேற்கின்றன. 
  • மே 3-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 30. 
  • https://tnea.ac.in மற்றும் https://www.annauniv.edu ஆகிய இணைய தளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 
  • விண்ணப்பித்தவர்களின் அசல் சான்றிதல் ஜூன் முதல் வாரத்தில் இருந்து சரிபார்க்கப்படும்.
  • ஜூன் முதல் வாரத்திலேயே ஆன்லைன் மூலம் கவுன்சிலிங்கும் தொடங்கும். 
  • அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் ஆன்லைன் கவுன்சிலிங்கில் மாணவ-மாணவிகள் பங்கேற்பதற்கு வசதியாக, மாநிலம் முழுவதும் 42 இலவச கலந்தாய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
  • 42 மையங்கள் எங்கெங்கு அமைக்கப்பட்டுள்ளன என்ற விவரத்தை https://tnea.ac.in மூலம் தெரிந்துகொள்ளலாம். 
  • மாணவர்களுக்கு கலந்தாய்வு குறித்து சந்தேகங்களை 044-22359901, 044-22359920 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புக் கொள்ளலாம்
  • கட்டணத்தைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ரூ 500-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ 250-ம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
  • இதேபோல caution deposit எனப்படும் முன்வைப்புத் தொகையாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ரூ. 5000-ம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ. 1000 செலுத்த வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் அன்பழகன் கூறினார்.