குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பரவலாக பெய்து வருகிறது.
மேலும், தொடர் மழையின் காரணமாக தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, திண்டுக்கல் ,குமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெற்கு அந்தமான் அருகே, அடுத்த 12 மணி நேரத்தில், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் (Regional Meteorological Centre) தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று முதல் நாளை காலை வரை சிறிது மழை பெய்யலாம் எனவும் இது கடைசி மழையாக இருக்கலாம் எனவும் வானிலை அறிக்கை கூறுகிறது, பின்னர் நாளை மதியம் முதல் மழை வெகுவாகக் குறையத் தொடங்கும் எனவும் வானிலை அறிக்கை கூறுகிறது.
மேற்கு உள் மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் இதனால் கன மழை பெய்யும். மேலும், மழை விட பெறும் இந்த நேரத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய இடங்களிலும் கன மழை பெய்யும்
ALSO READ | கொசஸ்தலை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்நிலையில் தெற்கு அந்தமான் அருகே அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு, கிழக்கு மத்திய வங்கக் கடலை நோக்கி நகரும் என வானிகை அறிக்கை தெரிவிக்கிறது. எனினும், தமிழ்நாட்டிற்கு இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மழை குறித்த எச்சரிக்கை ஏதும் இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
One last spell remains today to tomorrow morning for KTCC (Chennai and 100 kms) and then rain reduces drastically from tomorrow noon
Western interior & south TN will get rains from the pull effect. Coimbatore, Tiruppur, Erode will join today. Tuty & other districts will see rains pic.twitter.com/QR6eB8OPO0— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) November 30, 2021
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக டிசம்பர் 2, 3 தேதிகளில் ஆந்திரா, ஒடிசாவில் மிக பலத்த மழை பெய்யும். இதன் காரணமாக வரும் 2 மற்றும் 3ம் தேதிகளில் ஆந்திரா மற்றும் ஒடிசாவிற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுகிறது.
ALSO READ | ’நீருக்கு தெரியாது உறவின் வலி’ ஆற்றில் மூழ்கிய 2 மாணவர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR