TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் சேவை தேர்வு முடிவுகள் ரிலீஸ்: Check

டி.என்.பி.எஸ்.சி ஒருங்கிணைந்த பொறியியல் சேவை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அத முடிவுகளை எப்படி தெரிந்துக்கொள்ளலாம் என்று பார்ப்போம்!!

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 13, 2019, 07:56 PM IST
TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் சேவை தேர்வு முடிவுகள் ரிலீஸ்: Check title=

புதுடில்லி: ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission- TNPSC) வெளியிட்டுள்ளது. TNPSC பொறியியல் தேர்வு முடிவுகளை tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழக அரசின் கீழுள்ள பல்வேறு துறைகளில் பணிபுரிவதற்கான ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதை எப்படி பார்ப்பது என்று பார்ப்போம்!

ஆணைக்குழுவின் கூற்றுப்படி, இன்று வெளியிடப்பட்ட PDF கோப்பில் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதியவர்கள், தங்கள் பதிவு எண்கள் குறிப்பிட்டு ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் தேர்வில் வெற்றி பெற்ற சான்றிதழ் சரிபார்க்க தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது ஆகஸ்ட் 10, 2019 மற்றும் ஆகஸ்ட் 25, 2019 அன்று நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வின் முடிவுகளின் அடிப்படையில் விவரங்கள் தரப்பட்டு உள்ளது.

இந்த டி.என்.பி.எஸ்.சி முடிவு மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் தேர்வு எழுதியவர்கள் நவம்பர் 20 முதல் 29 வரை நடத்தப்படும் இ-சேவா மையங்களில் தேர்வு முடிவு ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்ற வேண்டும். நியமிக்கப்பட்ட இ-சேவா மையங்களின் பட்டியல் இணையதளத்தில் கிடைக்கும்.

பதிவேற்றப்பட வேண்டிய ஆவணங்கள் தொடர்பான விவரங்கள் ஆணைக்குழுவின் இணையதளத்தில் கிடைக்கப்பெறும், மேலும் எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே தேர்வாளர்களுக்கு அறிவிக்கப்படும். இது தொடர்பான தனிப்பட்ட தகவல் குறித்த செய்திகள் தபால் மூலம் அனுப்பப்படாது என டி.என்.பி.எஸ்.சி ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு முடிவு ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கால எல்லைக்குள் எந்தவொரு அத்தியாவசிய ஆவணங்களை பதிவேற்றத் தவறினால், அவர்கள் அடுத்த கட்டத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் மற்றும் அவர்களின் ஆன்லைன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் நேர்காணல் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். நேர்காணலில் மொத்தம் 70 மதிப்பெண்கள் இருக்கும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில், உதவி பொறியாளர் மற்றும் ஜூனியர் ஆர்கிடெக்ட் பதவிகளுக்கு தேர்வு செய்வதற்கான இறுதி தகுதி பட்டியலை ஆணையம் வெளியிடும்.

அதேபோல நேற்று கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான குரூப்-4 தேர்வு முடிவுகளை வெளியிடப்பட்டன. டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மதிப்பெண்கள் tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ போர்ட்டலில் கிடைக்கும்.

Trending News