தமிழகத்தில் நாளை முழு அடைப்பு!!

Last Updated : Sep 15, 2016, 12:56 PM IST
தமிழகத்தில் நாளை முழு அடைப்பு!! title=

கர்நாடக வன்முறை சம்பவத்தை கண்டித்து நாளை நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தனியார் பள்ளிகள் சங்கம் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளது. இதனால் நாளை தமிழகத்தில் அனைத்து தனியார் பள்ளிகளும் இயங்காது. மேலும் தனியார் பள்ளிகள் வாகன சங்கமும் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் சுமார் 15 ஆயிரம் தனியார் பள்ளிகள் நாளை ஒருநாள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரி குலேசன் மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் கே.ஆர். நந்தகுமார் கூறியதாவது:- தமிழகத்தில் நாளை நடைபெறும் பந்த் காரணமாக தனியார் பள்ளிகள் இயங்காது. பள்ளி வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன. வேன், ஆட்டோ உரிமையாளர்கள், டிரைவர்கள் இதில் கலந்து கொள்வதால் பள்ளிகளை திறப்பது பல்வேறு பிரச்சினைகள் கஷ்டங்களை ஏற்படுத்தும் என்பதால் தனியார் பள்ளிகள் செயல்படாது என்று கூறினார். 

தற்போது காலாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் நாளை பந்த் காரணமாக தனியார் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு நாளை மறுநாளான சனிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு வணிகர் சங்கம் பேரமைப்பு, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டியக்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை போன்ற அமைப்புகள் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்ததில் திமுக, பாமக, தமாகா, மதிமுக, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் என அனைத்து கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

Trending News