தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவிகள் உயிரிழப்பு

தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற இரண்டு மாணவிகள் கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 15, 2022, 12:58 PM IST
  • இரு குழந்தைகள் உயிரிழப்பு
  • தந்தைக்கு தீவிர சிகிச்சை
தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவிகள் உயிரிழப்பு title=

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் ஊராட்சி குமராமங்கலம் பகுதியை சேர்ந்த தண்டபாணி. இவருக்கு வயது 47 ஆகும். இவர் அதே பகுதியில் பிளாஸ்டிக் கதவு ஜன்னல்கள் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அனுராதா. இவருக்கு வயது 40 ஆகும். இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த இரண்டு குழந்தைகள் ஆம்பூர் கோவிந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வருகிறார். இதில் ஜெயா ஸ்ரீ பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு வயது 17 ஆகும். அதேபோல் இவரது இரண்டாவது மகள் வர்ஷா ஆறாம் வகுப்பில் படித்து வருகிறார். இவருக்கு வயது 11 ஆகும். 

இந்த நிலைதியில் இந்த இரண்டு குழந்தைகளும் தினசரி பள்ளி வாகனங்கள் மூலம் பள்ளி சென்று வந்தனர். இன்று இவர்கள் பள்ளி வாகனத்தை தவர விட்டதால் தண்டபாணி இவர்களின் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது ஆம்பூர் ஓ ஏ ஆர் தியேட்டர் சிக்னல் அருகே ஓசூரில் இருந்து சென்னைக்கு சென்ற கனரக கன்டெய்னர் லாரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புகளை இடித்து தாறுமாறாக மோதியாது. இதில் அங்கு விபத்துக்குள்ளானது. 

மேலும் படிக்க | மருந்து தட்டுப்பாடே இல்லை போலியாக வதந்திகளை பரப்புவது ஏன்? அமைச்சர் காட்டம்

இந்த விபத்தில் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பள்ளி மாணவிகள் மீதும் மோதி விபத்து ஆனது. இந்த விபத்தில் தந்தை தண்டபாணி படுகாயம் அடைந்துள்ளார். மேலும் இவரது இரண்டு மகள்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் நகர போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த வரை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்பூரில் பள்ளி மாணவி அக்கா தங்கை இருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | எஸ்டிபிஐ அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை; சீமான் கடும் கண்டனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News