சென்னை அடுத்த குன்றத்தூரில் கடந்த 14 ஆண்டுகளாக இயங்கி வரும், சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி CIT கல்வி குழுமத்தின் 9 பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மத்திய அரசின் கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சார்கர், இளங்கலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி முடித்த 573 பட்டதாரிகள், முதுகலை பொறியியல் கல்வி முடித்த 20 பட்டதாரிகள் என மொத்தம் 593 பட்டதாரிகளுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி குழும தலைவர் ஸ்ரீராம், கல்லூரி கல்வி நிறுவனம் முதல்வர் ரமேஷ், மற்றும் ஏனைய கல்லூரி பேராசிரியர்கள் உடன் இருந்தனர். அப்போது மேடையில் பேசிய அமைச்சர் சுபாஷ் சார்கர், " கல்வி என்பது உங்களின் வாழ்க்கைக்கும், சமுதாயத்திலும், நாட்டிலும் உள்ள சவால்களை தீர்த்து வைக்கிறது.
21 ஆம் நூற்றாண்டில் தேசிய கல்விக் கொள்கை மாணவர்களின் கல்வி ஆற்றலில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது, அனைவருக்கும் சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கில் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. தனித்துவமான திறமையை மேம்படுத்தி சிறந்த சாதனையாளர்களாக உருவாக்க வேண்டும். நீங்கள் பணத்தை தேடி செல்ல வில்லை என்றால் பணம் உங்களை தேடி வரும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்றான சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி இன் பயின்று பட்டம் பெற்றுள்ள உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது வாழ்த்துக்கள்" என கூறினார்.
மேலும் படிக்க | போலி சான்றிதழ்கள் மூலம் லோன் பெற்ற பெண் கைக்குழந்தையுடன் கைது
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இணை அமைச்சர் சுபாஷ் சார்கர், " கடந்த எட்டு மாதங்களில் மூன்று லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புயினை உருவாக்கி பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தின் கீழ் இளம் முனைவோர்களுக்கான ஊக்கத்தை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றோம். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர்களின் திறன் வளர்ச்சி பெருக்குவதற்கு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இலவசமாக இளைஞர்களுக்கு திறன் வளர்ச்சி பயிற்சிகள் அளித்து வருகிறோம்.
எந்த ஒரு தனியார் நிறுவனமாக இருந்தாலும், அவற்றிற்கு ஊக்கமளிக்கும் வகையில் குறைந்த அளவிலான வட்டி விகிதத்தில் கடன் உதவிகள் வழங்கி வருகிறோம். தற்போதைய சூழலில் பல்வேறு பட்டப் படிப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது அதற்கான கற்பித்தல் தகுதியை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு தனி பயிற்சி அளிக்கப்படுகிறது தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அங்கமே இதுதான். வரும் ஆண்டுக்குள் அனைத்து வகையான பயிற்சிகளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.
தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை, அதற்கான கடிதம் என்னிடம் உள்ளது அதை நான் காண்பிக்க தயார். ஆனால் அவற்றில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர், தேசிய கல்விக் கொள்கைக்கான வரையறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன அது மாநில அரசிடம் வழங்கி அதன் பின்னர் தான் இறுதி கட்ட வரையறை முடிவு செய்யப்படும். தேசிய கல்விக் கொள்கை என்பது வருங்கால இந்தியாவான இளம் தலைமுறைக்கு கல்வியில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு திட்டமாகும், அவர்களின் உயர் கல்விக்கு இது ஒரு மிகுந்த உத்வேகத்தை அளிக்கும்.
நீட் தேர்வுக்கு எதிரான மாபெரும் கையெழுத்து இயக்கம் என்பது ஒரு அரசியல் நிகழ்ச்சி, அவர்களும் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி கொண்டுதான் இருக்கிறார்கள். சென்ற நவம்பர் 15ஆம் தேதி பிரதமர் மோடி அவர்கள் விக்சிங் பாரத் சங்கலப் யாத்ரா என்னும் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்தான மக்கள் தொடர்பு இயக்கத்தை தொடங்கி வைத்தார், தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, சேலம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் திட்டம் தொடங்கப்பட்டது, வரும் ஜனவரி 26 ஆம் தேதிக்குள் இந்த சாதனை விளக்க மக்கள் தொடர்பு இயக்கம் பிரச்சாரப் பயணம் 12,525 கிராமப் பகுதிகளையும், 400 வளர்ந்த நகரங்களையும் சென்றடையும்." என கூறினார்.
மேலும் படிக்க | திருவண்ணாமலை: 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் தீப கொப்பறை..! ஏற்பாடுகள் தயார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ