சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கும் பணம்..!! வேலூரில் தேர்தல் ரத்தாகுமா?

வருமான வரித்துறையினர் சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கும் பணம். வேலூர் மக்களவை தேர்தல் ரத்தாகுமா? என்பது குறித்து இன்று விளக்கம் அளித்தார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 1, 2019, 02:21 PM IST
சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கும் பணம்..!! வேலூரில் தேர்தல் ரத்தாகுமா? title=

வருமான வரித்துறையினர் சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கும் பணம். வேலூர் மக்களவை தேர்தல் ரத்தாகுமா? என்பது குறித்து இன்று விளக்கம் அளித்தார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ.

வேலூரில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனைகளை நடத்தி வருகின்றனர். அதுவும் குறிப்பகா திமுக கட்சியை சேர்ந்தவர்களை குறிவைத்து, இந்த சோதனை நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த 29 ஆம் தேதி திமுக பொருளாளர் துரைமுருகனின் காட்பாடி இல்லத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் ரூ.10 லட்சம் கணக்கில் வராத பணம் சிக்கியது எனக் கூறப்பட்டது. 

இதனையடுத்து, இன்றும் தொடர்ந்து வேலூரில் துரைமுருகன் மகன், ஆதரவாளர்கள் வீடுகளில் தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருகிறது. அப்பொழுது சிமெண்ட் குடோனிலிருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தப் பணம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இதுவரை ரூ.78.12 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுக்குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம், வேலூரில் கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதுக்குறித்து வருமானவரித் துறையினரின் இறுதி அறிக்கைக்காக காத்திருக்கிறோம். இறுதி அறிக்கை வந்தபின்பு, அதை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். 

வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்ப்படுமா? என்பது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் எனக் கூறினார்.

Trending News