வியட்நாம் கடலோர காவல் படையைச் சேர்ந்த சி.எஸ்.பி. 8001 கப்பல் இன்று சென்னை துறைமுகம் வந்தடைந்தது.
Vietnam Coast Guard ship CSB 8001 on her maiden visit to India arrives at Chennai port. Indian Coast Guard & Vietnam Coast Guard Ship will take part in the Indo-Vietnam joint exercise on 4th October, to promote interoperability between the two maritime forces. pic.twitter.com/dLCH0zu8UN
— ANI (@ANI) October 2, 2018
இந்தியா - வியட்நாம் இடையே கடலோரப் பாதுகாப்புக் குறித்து 2015ம் ஆண்டு செய்து கொண்ட உடன்பாட்டின்படி இருநாட்டுக் கடலோரப் பாதுகாப்புப் படையினரும் கூட்டாகப் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். இதற்காக வியட்நாம் கடலோரக் காவல் படையின் சி.எஸ்.பி. 8001 கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வந்தடைந்தது.
அந்த கப்பலுக்கு இந்திய கடலோர காவல் படையினரும், பள்ளி மாணவ, மாணவிகளும் சிறப்பான வரவேற்றனர். வரும் 4ம் தேதியன்று நடைபெற உள்ள கூட்டுப்பயிற்சியில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஷவுரியா கப்பல் பங்கேற்கிறது. மேலும் அன்றைய தினத்தில் கடத்தல் தடுப்பு, கடற் கொள்ளைகள் தடுப்பு, எல்லை தாண்டி மீன் பிடிப்பதைத் தடுத்தல் ஆகிய பயிற்சிகளில் இரு நாட்டுக் கடலோரக் காவல் படையினரும் ஈடுபட உள்ளனர்.