"பரியேறும் பெருமாள்" படத்திற்கு வடநாட்டில் கிடைத்த பெருமை!

தமிழ் திரையுலக ரசிகர்கள் மட்டுமல்லமாலம் வடநாடு வரை ரசிகர்களை எட்டி பிடித்துள்ளது பரியேறும் பெருமாள் திரைப்படம்!

Written by - ZEE Bureau | Last Updated : Sep 30, 2018, 01:15 PM IST
"பரியேறும் பெருமாள்" படத்திற்கு வடநாட்டில் கிடைத்த பெருமை!

தமிழ் திரையுலக ரசிகர்கள் மட்டுமல்லமாலம் வடநாடு வரை ரசிகர்களை எட்டி பிடித்துள்ளது பரியேறும் பெருமாள் திரைப்படம்!

கடந்த வாரம் திரைக்கு வந்த பரியேறும் பெருமாள் திரைப்படம் மக்களின் பேராதரவோடு வெற்றிப்பயணத்தை தொடர்ந்து வருகின்றது. மேலும் முதலில் குறைந்த திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்ட இந்த திரைப்படத்திற்கான ஆரங்கங்களின் எண்ணிக்கையினையும் படக்குழுவினர் அதிகரித்து வருகின்றனர்.

இப்படத்தினை அனைவரும் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் மட்டும் அல்ல, திரையுலக பிரபலங்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக பாலிவுட் பிரபலம் அமீர் கான் மற்றும் அமிதாப் பச்சனை ஆகியோரை டேக் செய்து, "நாங்கள் தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தை விரைவில் பார்த்து ரசிக்க காத்திருக்கின்றோம் இருக்கிறோம். திரையில் முத்தாய் வெளியாகி உள்ள பரியேறும் பெருமாள் படத்தை நீங்களும் பார்த்து ஆதரவு தெரிவிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், "இது என்ன படம். சப்டைட்டிலுடன் வடஇந்தியாவில் என்னு திரையிடப்படுகிறது" என கேட்டுள்ளார். அவருக்கு இப்படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித், மும்பயைில் எங்கு பரியேறும் பெருமாள் திரையிடப்படுட்டுள்ளது என்ற தகவலையும் அளித்துள்ளார். இந்த சம்பவம் பரியேறும் பெருமாள் திரைப்படத்தினை பார்க்காதவர்களையும் விரைவில் பார்க்கவேண்டும் என தூண்டியுள்ளது!

More Stories

Trending News