சாலை தான் இல்லை... பாதையாவது அமைத்துக் கொடுங்கள்... தவிக்கும் கிராம மக்கள்..!!

காட்பாடி அருகே 50 ஆண்டுகளாக பாதை இல்லாத நிலையில், பரிதாப நிலையில் உள்ள கிராம மக்கள்,  சாலை வசதி வேண்டாம் பாதை மட்டும் அமைத்து கொடுங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 24, 2024, 03:38 PM IST
  • பாதை மட்டும் அமைத்து கொடுங்கள் என கோரிக்கை வைத்துள்ள கிராம மக்கள்
  • 50 ஆண்டு கால பிரச்சனை வெளியுலகிற்கு தற்போதய வந்துள்ளது.
  • காட்பாடி அருகே 50 ஆண்டுகளாக பாதை இல்லாத கிராமம்.
சாலை தான் இல்லை... பாதையாவது அமைத்துக் கொடுங்கள்... தவிக்கும் கிராம மக்கள்..!! title=

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ளது இளையநல்லூர் ஊராட்சி இங்கு ஆந்திர மாநில எல்லையை ஓட்டி இலட்சுமிபுரம் என்ற கிராமம் அமைந்து உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் உள்ளனர். கடந்த 50 வருடங்களாக இந்த பகுதி மக்கள் தங்கள் இடத்திற்கு வருவதற்கு  முறையான வழி கிடையாது. இளையநல்லூர் ஊராட்சியிலிருந்து, குருநாதபுரம் வழியாக தனிநபர் ஒருவரின் பட்டா நிலத்திற்கு மேல் வரும் ஒற்றை அடி பாதையில், இவர்கள் காலம்தொட்டு பயன்படுத்தி தங்கள் பகுதிக்கு வந்து உள்ளனர். 

இப்பொழுது திடிரென அந்த தனிபரும் அந்த பாதையை மூடி உள்ளதால் 50 ஆண்டு கால பிரச்சனை வெளியுலகிற்கு தற்போதய வந்துள்ளது. தற்போது தனிநபர்  பாதை மூடியதால் 2 கிலோ மீட்டர் சுற்றி கொண்டு மலையிலிருந்து வரும் மழை தண்ணீர் செல்லும் ஓடை வழியாக தான் இந்த மக்கள் தங்கள் பகுதிக்கு வர வேண்டும்.

மேலும் மழைக் காலத்தில் ஓடையில் தண்ணீர் சென்றால் லட்சுமிபுரம் ஊரில் இருந்து துண்டிக்கபட்டு தனி தீவாக காட்சி அளிக்கும் என்றும் பள்ளி, மருத்துவமனை என அவசர தேவை எதுவாக இருந்தாலும், இந்த மக்கள் இந்த 2 கிலோ மீட்டர் ஓடையை சுற்றி கடந்து தான் செல்ல வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.

மேலும் தற்போது பள்ளிகள் துவங்க உள்ள நிலையில் ஓடையை கடந்து காப்பு காட்டு பாதை வழியாக 8 கிலோ மீட்டர் சைக்கிளில் சென்று படித்து விட்டு காட்டு பாதையில் வீடு திரும்பும் படிக்கும் பிள்ளைகளின் நலனை கருத்தில் கொண்டாவது மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு பாதைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இந்த மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News