தென்மாநிலங்களில் வெயில் காலம் தொடங்கியுள்ளதால், நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் எப்பொழுதும் இருக்கும் இயல்பை விட, சில இடங்களில் அதிக அளவில் வெப்பம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த வெப்பத்துடன் சேர்ந்து காற்று வீசுவதால் அனல் காற்று வீசும் எனவும் எச்சரித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
தமிழக சில கடலூர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கலாம். மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, மதுரை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டம் போன்ற பகுதிகளில் அனல் காற்று வீசும். இந்த பகுதிகளில் வெப்பநிலை இயல்பான அளவை விட 3 டிகிரியில் இருந்து 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.