கருணாநிதி ஹெல்த்!! இதுவரை வெளியான 5 மருத்துவ அறிக்கைகள் என்ன சொல்கிறது

முன்னால் தமிழக முதல்வர் கருணாநிதி உடல்நிலை குறித்து இதுவரை வெளியான 5 மருத்துவ அறிக்கைகள் என்ன சொல்கிறது என்ற விவரத்தை பார்ப்போம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 6, 2018, 11:09 PM IST
கருணாநிதி ஹெல்த்!! இதுவரை வெளியான 5 மருத்துவ அறிக்கைகள் என்ன சொல்கிறது title=

வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த பத்து நாட்களாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.  

இதை தொடர்ந்து, காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்கானிப்பில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கருணாநிதி உடல் நலம்பெற வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர். மேலும் கடந்த மாதம் 27 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வருகிறது. 

கடந்த மாதம் 28 ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு முதல் அறிக்கை வெளியிட்டப்பட்டது. அதில் முன்னால் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உடல்நிலை சீராக உள்ளது என கூறப்பட்டு இருந்தது.

 

அன்றைய தினமே இரவு 8 மணிக்கு மீண்டும் அறிக்கையை (இரண்டாவது) காவேரி மருத்துவமனை வெளியிட்டது. அதில் தற்போது முன்னால் தமிழக முதல்வர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து மருத்துவக் குழு கண்காணிப்பில் இருக்கிறார் என வெளியானது. 

 

அடுத்த நாள் (ஜூலை 29) இரவு 9.50 மணிக்கு மூன்றாவது அறிக்கை வெளியானது. அதில் டாக்டர் கலைஞர் கருணாநிதிக்கு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதால், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்ப்பட்டு உள்ளது என கூறப்பட்டிருந்தது.

 

ஒருநாள் கழித்து கடந்த மாதம் ஜூலை 31 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நான்காவது அறிக்கை வெளியானது. அதில் ஜூலை 29 ஆம் தேதி ஏற்பட்ட பின்னடைவுக்கு பிறகு தொடர்ந்து உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது. அவருடைய வயதின் காரணமாகவும் உடல்நிலை காரணமாகவும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டி இருக்கிறது. தற்போது இவரின் உடல் உறுப்புகள் சீராக இயங்கி வருகிறது.

 

இந்நிலையில், இன்று ஐந்தாவது அறிக்கை மாலை 6.30 மணிக்கு காவேரி மருத்துவமனை வெளியிட்டது. அதில் முன்னால் தமிழக முதல்வர் கருணாநிதியின் முக்கிய உடல் உறுப்புகளில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு பின்பு தான் எந்த முடிவையும் சொல்ல முடியும். தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

 

Trending News