#CauveryIssue: எடப்பாடியை சந்தித்த தமிழக விவசாயிகள்!!

தமிழக விவசாய சங்கப் பிரதிநிதிகள், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் பழனிசாமியை சந்தித்தனர்!

Last Updated : Apr 26, 2018, 07:09 AM IST
#CauveryIssue: எடப்பாடியை சந்தித்த தமிழக விவசாயிகள்!!  title=

கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை விசாரித்த வந்த உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில், காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என மத்திய அரசுக்கு ஆணையிட்டது. 

ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசு என தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்நிலையில், தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர், விருதகிரி, விவசாயிகள் சங்கத் தலைவர், செல்லமுத்து, வேட்டவலம் மணிகண்டன், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர், ராஜ்குமார். காவிரி பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர், தனபாலன், உள்ளிட்டோர், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் பழனிசாமியை சந்தித்தனர்!

அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று முதல்வரரிடம் கோரிக்கை வைத்தனர். 

தொடர்ந்து அவர்கள், கடன் தள்ளுபடிக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் செய்துள்ள முறையீட்டை வாபஸ் பெற வேண்டும். கரும்பு விவசாயிக்கு, சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவைத் தொகையை, பெற்றுத் தர வேண்டும். 

காவிரி நீர் கிடைக்காததால், டெல்டா விவசாயிகளுக்கு, விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

அவர்களிடம் பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, விவசாயிகளுக்கு சாதகமான முடிவுகளை அரசு எடுக்கும் என உறுதி அளித்தார். அப்போது அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Trending News