டெக்னாலஜி உலகின் ஜாம்பவான் IBM ஆனது உலகின் மிகச்சிறிய கணினியை வெளியிட்டுள்ளது!
சுமார் 1 x 1 மிமீ அளவீடு கொண்ட இந்த உலகின் மிக்ச்சிறிய கணினியினை IBM Think 2018 மாநாட்டில் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து IBM வெளியிட்டுள்ள ஆராய்ச்சி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.. "உலகின் மிகச் சிறிய கணினியை கொண்டுவரும் முயற்சியினை ஆரம்பிக்கையில் அது உப்புத் தானியத்தை விட சிறியதாக இருக்க வேண்டும் என்று உறுதி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது பத்து சென்டிற்கும் குறைவாக செலவில், ஆயிரக் கணக்கான சிப்புகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கணினியால் கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும், தொடர்பு கொள்ளவும் மற்றும் தரவு செயல்படவும் முடியும். ஆயிரம் டிரான்சிஸ்டர்கள் மனிதக் கண்ணுக்கு ஒரு பார்வைக்கு அரிதாகவே தெரியும் மற்றும் ஒரு தயாரிப்பு தனது நீண்ட பயணத்தின் முடிவில் ஒழுங்காக கையாளப்படுவதை சரிபார்க்க உதவுகிறது" என்று தெரிவித்துள்ளது.
இந்த சாதனமானது IMB Research’s 5-ன் ஒரு பகுதியாகும். மேலும் வரும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முன்பை விட கைகடக்கமான சாதனங்களை வெளியிடுவதற்கான பணிகளை IBM மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் செயற்கை அறிவுத்திறன் (AI) கொண்ட வாட்சன் அஸிஸ்டன்ஸ-னை வெளியிடுவது குறித்த அறிவிப்பினையும் IBM இந்த மாநாட்டில் தெரிவித்துள்ளது. இந்த சாதனமானது குரல் வழியாக பயனர்களுடன் தொடர்புக்கொள்ளும் வைகையில் இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது.
இந்த செயற்கை அறிவுத்திறன் சாதனமானது. மூன்றாம் தர நிறுவனங்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் எனவும் IBM தெரிவித்துள்ளது!