அப்துல் கலாம் தீவில் அக்னி-2 ஏவுகணை சோதனை!

ஒடிசா மாநிலம் அருகே அமைத்துள்ள வங்க கடல் பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவில் அணு ஆயுத திறன் கொண்ட அக்னி-2 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

Last Updated : Feb 20, 2018, 11:20 AM IST
அப்துல் கலாம் தீவில் அக்னி-2 ஏவுகணை சோதனை! title=

ஒடிசா மாநிலம் அருகே அமைத்துள்ள வங்க கடல் பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவில் அணு ஆயுத திறன் கொண்ட அக்னி-2 ஏவுகணை விண்ணில் செலுத்தி, இந்தியாவின் மூலோபாய படைகளினால் சோதனை நடத்தப்பட்டது.

இந்த அக்னி-2 ஏவுகணை சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கவல்ல திறன் கொண்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 1 டன் அணு ஆயுத பொருளை தாங்கி சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கக்கூடிய வகையில் இந்த ஏவுகணையை ஐதராபாத்தில் உள்ள டி.ஆர்.டி.ஓ. (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு) வடிவமைத்து இருக்கிறது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 20 மீட்டர் உயரம் கொண்ட இந்த ஏவுகணை 2 திட எரிபொருள் நிலையை கொண்டது.

அணு ஆயுத பொருளின் எடையை குறைப்பதன் மூலம் இந்த ஏவுகணை இலக்கை தாக்கும் தூரம் மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Trending News