Amazon: ஆஃபருக்காக அமேசானில் ஒரு பெஸ்டிவல்: கேட்ஜெட்டுகளை அள்ளிப்போங்க!

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் தொடங்க உள்ள நிலையில், அதில் இருக்கும் சிறந்த ஆஃபர் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 31, 2022, 06:38 PM IST
Amazon: ஆஃபருக்காக அமேசானில் ஒரு பெஸ்டிவல்: கேட்ஜெட்டுகளை அள்ளிப்போங்க! title=

Amazon Great Freedom Festival Sale 2022;  ஆன்லைன் ஷாப்பிங் மிகவும் அதிகரித்துள்ளது. இதில் அனைவருக்கும் தெரிந்த மற்றும் நம்பிக்கை பெற்ற ஒரு தளம் என்றால் அது அமேசான் தான்.  அந்த அமேசானில் விரைவில் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் விற்பனை நடக்க இருக்கிறது. இது பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்காக அண்மையில் அமேசான் பிரைம் டே சேல் பிரத்தியேகமாக நடத்தப்பட்ட நிலையில், விரைவில் அனைவரும் பங்கேற்கும் ஆஃபர் திருவிழாவை நடத்த இருக்கிறது அமேசான். இதில் உங்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படும். 

Amazon Great Freedom Festival விற்பனை தேதி 

அண்மையில் அமேசான் கிரேட் ப்ரீடம் விற்பனை குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், இப்போது தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் சுதந்திர மாதத்தை கொண்டாடும் வகையில், Amazon Great Freedom Festival விற்பனை ஆகஸ்ட் 6 முதல் Amazon-ல் தொடங்க இருக்கிறது. 10 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த ஆஃபரில் பல அற்புதமான சலுகைகள் மற்றும் டீல்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | iPhone 13 இல் பம்பர் சலுகை! ரூ.29 ஆயிரம் வரை தள்ளுபடி பெறுங்கள்

Amazon Great Freedom Festival சலுகைகள்

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் பல சலுகைகள் வழங்கப்பட்டாலும், சில கூடுதல் சலுகைகள் உள்ளன. அதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். அமேசான் முதல் முறையாக வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் கேஷ்பேக் வழங்குகிறது. யூசர்கள் பொருட்களை வாங்க SBI-ன் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், அவர்களுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

Amazon Great Freedom Festival சிறந்த சலுகைகள்

இந்த ஆஃபரில் கூடுதலான ஆஃபரில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் மீது 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. நீங்கள் சில புதிய ஸ்மார்ட்போன்களை ரூ.6,599 அல்லது அதற்கும் குறைவான விலையில் வாங்கலாம். OnePlus 10T 5G மற்றும் iQOO 9T ஆகியவை இந்த விற்பனையில் அறிமுகப்படுத்தப்படும். மேலும், Redmi K50i 5G மீதும் தள்ளுபடிகள் வழங்கப்படும். மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கும் கூடுதலாக விற்பனையில் சலுகைகள் கொடுக்கப்பட இருக்கிறது. ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் 45 சதவீதம் வரை தள்ளுபடியில் கிடைக்கும். சில லேப்டாப்களை 40 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடியில் வாங்கலாம்.

மேலும் படிக்க | Top 5 AC: குறைவான மின்சாரம்.. குளுகுளுவென இருக்கும் வீடு: டாப் 5 ஏசி-க்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News