திருடிய மொபைல் சுவிட்ச் ஆப் ஆனாலும் டிராக் செய்யலாம் - கூகுள் மெகா அப்டேட்

Mobile Tracking: ஸ்மார்ட்போன்கள் திருடுப்போவதை கண்டுபிடிக்கும் வகையில் கூகுள் ஒரு மெகா அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது. திருடிய மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆனாலும் அதனை கண்டுபிடிக்க புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 17, 2024, 10:39 AM IST
  • ஆன்லைன் மொபைல் டிராக்கிங்கில் புதிய அம்சம்
  • மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆனாலும் டிராக் செய்யலாம்
  • மே 14 ஆம் தேதி அறிமுகப்படுத்த இருக்கிறது கூகுள்
திருடிய மொபைல் சுவிட்ச் ஆப் ஆனாலும் டிராக் செய்யலாம் - கூகுள் மெகா அப்டேட் title=

கூகுள் நிறுவனம் விரைவில் நடத்த இருக்கும் ஐஓ 2024 மாநாட்டில் தொலைந்து போன மொபைல்கள் நெட்வொர்க் இல்லாத இடத்தில் இருந்தால்கூட கண்டுபிடிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட இருக்கிறது. ஸ்விட்ச் ஆஃப் செய்யப்படிருந்தால்கூட ஆண்ட்ராய்டு 15 அம்சம் மூலம் மொபைலை கண்டுபிடித்துவிடலாம் என்பது தான் இதில் இருக்கும் கூடுதல் சிறப்பம்சம். பெரிதும் எதிர்பார்க்கப்படும் கூகுள் ஐஓ 2024 கிரியேட்டர் மாநாடு வரும் மே 14 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் மொபைல் பாதுகாப்பு குறித்த அப்டேட்டுகள் ஆச்சரியப்படுத்தும் அம்சங்களுடன் வெளியாக இருக்கிறது. கூகுளின் ஆண்டராய்டு 15 அப்டேட், மொபைல் போன்களை பாதுகாப்பதில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | போன் தொலைந்து போனாலும் கவலைப்படாதிங்க... இனி ஸ்விட்ச் ஆப் ஆனாலும் கண்டுபிடிக்கலாம்!

கடந்த ஆண்டு காணாமல் போன மொபைல்கள் ஸ்விட்ச் ஆப் செய்வதற்கு முன்பு, அதாவது இயங்கும் நிலையில் இருக்கும்போது கண்டுபிடிப்பது குறித்து தான் விவாதிக்கப்பட்டது. இது ஆண்ட்ராய்டு 15 அப்டேடிலும் இடம்பெறும் என்றாலும் ஆப்பிளின் ஃபைண்ட் மை நெட்வொர்க்கைப் போலவே புதிய அப்டேட் அம்சம் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. யூசர்கள் இண்டர்நெட் கனெக்ஷன் இல்லாமல் தங்கள் மொபைல்களை கண்டறியலாம். புளூடூத் பீக்கான் சிக்னலிங் மூலம் இந்த புதிய அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிக்னல் தொலைந்துபோன மொபைல் இருப்பிடத்தைக் ரிலே செய்யும். ஆண்ட்ராய்டு 15 ஆல் மொபைல் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் தொலைந்த ஸ்மார்ட்போன்களை புதிய அம்சம் கண்டறிய உதவும்

இருப்பினும், Google I/O 2023 இல் அறிவிக்கப்பட்ட ஆஃப்லைன் டிராக்கிங் மற்றும் மூன்றாம் தரப்பு டிராக்கர்களை உள்ளடக்கிய Google இன் Find My Device நெட்வொர்க்கின் Extension இன்னும் செயல்படுத்தப்படவில்லை. ஆப்பிள் கிராஸ்-பிளாட்ஃபார்ம் டிராக்கிங் விவரக்குறிப்புகளை இறுதி செய்ய கூகுள் காத்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை, இந்த நெட்வொர்க் ஸ்மார்ட்போன் பாதுகாப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல் தனியுரிமைப் பாதுகாப்பையும் மேம்படுத்தும். அறியப்படாத மூன்றாம் தரப்பு டிராக்கர் அனுமதியின்றி பயனர்களைக் கண்டறிய முயற்சித்தால் அது பயனர்களுக்குத் தெரிவிக்கும்.

தற்போது, ஃபைண்ட் மை டிவைஸ் நெட்வொர்க் ஆன் மற்றும் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு சாதனங்களைக் கண்காணிக்க முடியும். இதை ஆஃப்லைன் டிராக்கிங்கிற்கு விரிவாக்குவது அதன் பயனை பெரிதும் அதிகரிக்கும். மேலும் பல இக்கட்டான சூழ்நிலைகளில் பயனர்கள் தங்கள் சாதனங்களைக் கண்டறிய உதவுகிறது. இப்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மையென்றால் இந்த அம்சம், புதிய அம்சம் Google Pixel 9 உடன் அறிமுகமாகலாம். Google Pixel 8 இல் கூட கிடைக்கக்கூடும். அதேநேரத்தில் ஆஃப்லைன் டிராக்கிங்கைச் செயல்படுத்த குறிப்பிட்ட Hardware பொறியியல் தேவைப்படுகிறது. 

Google I/O 2024 மாநாட்டுக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஏனெனில் இது ஆண்ட்ராய்டு 15ஐ காட்சிப்படுத்துவது மட்டுமின்றி, How to manage and secure our devices என்பதில் குறிப்பிடத்தக்க அப்டேட்டுகளையும் அறிமுகப்படுத்துகிறது. ஆஃப்லைன் டிவைஸ் டிராக்கிங்கைச் சேர்ப்பது என்பது தொழில்நுட்ப துறையில் ஏற்படப்போகும் மிகப்பெரிய புரட்சியின் முன்னோட்டமாக இருக்கும். மேலும், யூசர்களின் டிஜிட்டல் வாழ்க்கையை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | வாட்ஸஅப் அப்டேட்: ஸ்பேம் அழைப்புகளை ஈஸியாக தடுக்கும் அம்சம் அறிமுகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News