அதிரடியாக விலை குறைந்த Apple iPhone 12!

Flipkart ஷாப்பிங் தளத்தில் மிக குறைந்த தள்ளுபடி விலையில் Apple iPhone 12 ஆனது ரூ. 37,000க்கு விற்கப்படுகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 30, 2022, 12:38 PM IST
  • ரூ. 65,900க்கு விற்கப்பட்ட 64 GB கொண்ட Apple iPhone 12 ஆனது 19 சதவீத தள்ளுபடியில், Flipkart-ல் ரூ.52,999க்கு கிடைக்கிறது.
  • சிட்டி கிரெடிட் கார்டு/டெபிட் கார்டுகளை பயன்படுத்துவதன் மூலம் பயனர்கள் 10 சதவீதம் தள்ளுபடியை பெறலாம்.
அதிரடியாக விலை குறைந்த  Apple iPhone 12!  title=

Flipkart -ல் அதிக சலுகைகளுடன் ஆப்பிள் போன்கள் விற்பனைக்கு வந்துள்ளது.  அதன்படி Apple iPhone 12 அதிகமான தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.  ரூ.40000க்குள் ஐபோன் வாங்க வேண்டும் என்று நீங்கள் இதுவரை கனவு கண்டிருந்தால், அந்த கனவை உடனடியாக நிறைவேற்றக்கூடிய உன்னதமான நேரம் இது.  Flipkart-ல்  Apple iPhone 12  தள்ளுபடி விலையில் ரூ.37000க்கு கிடைக்கிறது, மேலும் இதன் மூலம் எக்ஸ்சேஞ் செய்து கொள்ளலாம்.  இந்த தள்ளுபடி விலையில் இந்த மொபைலை நீங்கள் வாங்குவதன் மூலம் ரூ.12,901ஐ உங்களால் சேமிக்க முடியும்.

ALSO READ | Flipkart Offer; வெறும் ரூ.99க்கு Realme ஸ்மார்ட்போன் வாங்க அரிய வாய்ப்பு

ரூ. 65,900க்கு விற்கப்பட்ட 64 GB கொண்ட Apple iPhone 12 ஆனது 19 சதவீத தள்ளுபடியில், Flipkart-ல் ரூ.52,999க்கு கிடைக்கிறது.  இதன் மூலம் ரூ.12,901 ஐ உங்களால் சேமிக்க இயலும்.  சிட்டி கிரெடிட் கார்டு/டெபிட் கார்டுகளை பயன்படுத்துவதன் மூலம் பயனர்கள் 10 சதவீதம் தள்ளுபடியை பெறலாம்.  அதேபோல் Flipkart-ல் Axis Bank கிரெடிட் கார்டுகளை பயன்டுத்தும் பயனர்கள் 5 சதவீதம் ஆலிமிடெட் கேஷ்பேக்கை பெறுவார்கள்.

Flipkart-ன் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் மூலம் பழைய ஸ்மார்ட்போனை மாற்றி  iPhone 12 ஐ வாங்குவதன் மூலம் ரூ. 15,850 தள்ளுபடி கிடைக்கும்.  மேலும் உங்கள் பழைய போனின் மற்றும் அதன் நிலையைப் பொறுத்து தான் பணம் குறைக்கப்படும்.  மேலும் ரூ.64,999க்கு விற்கப்படும் iPhone 12ன் 128GB variant, Flipkart-ல் 8 சதவீதம் தள்ளுபடியுடன் கிடைக்கிறது.  எக்ஸ்சேஞ் சலுகையை பயன்படுத்தி ரூ.15,850 தள்ளுபடி பெறலாம். 

iPhone 12 Pro-ன் 128 GB variant தள்ளுபடி விலையில் ரூ.1,04,900க்கு கிடைக்கிறது, எக்ஸ்சேஞ் சலுகையை பயன்படுத்தி ரூ.15,850 தள்ளுபடி பெறலாம்.  சிட்டி கிரெடிட்/டெபிட் கார்டுகளில் 10 சதவீதம் தள்ளுபடி பெறலாம்.  அடுத்ததாக iPhone 12 Pro Max-ன் 128GB variant Flipkart-ல்  ரூ.1,19,900க்கு கிடைக்கிறது. இதற்கும் எக்ஸ்சேஞ் ஆஃபர் வங்கி சலுகை உள்ளது.  iPhone 12 mini-ன் 64 GB variant 29 சதவீதம் தள்ளுபடியில் Flipkart-ல்  ரூ.41,999க்கு கிடைக்கிறது.  இதற்கும் எக்ஸ்சேஞ் சலுகையை பயன்படுத்தி ரூ.15,850 தள்ளுபடி பெறலாம், மேலும் வங்கி சலுகையையும் பெறமுடியும்.

ALSO READ | Flipkart Sale: ரூ.70,999 ஸ்மார்ட் டிவி-ஐ வெறும் ரூ. 25,186-க்கு வாங்க சூப்பர் வாய்ப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News