Jaunty Plus 120: அறிமுகம் ஆனது அட்டகாசமான மின்சார பைக், விவரங்கள் இதோ

Jaunty Plus 120: எலக்ட்ரிக் மொபிலிட்டி பிராண்டான ஏ.எம்.ஓ எலக்ட்ரிக் அதன் புதிய மின்சார ஸ்கூட்டர்/பைக் ஜாண்டி பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 8, 2022, 05:44 PM IST
  • நாட்டில் மின்சார ஸ்கூட்டர்களுக்கான தேவை மிக வேகமாக உயர்ந்துள்ளது.
  • ஏ.எம்.ஓ எலக்ட்ரிக் பைக்ஸ் அதன் புதிய மின்சார ஸ்கூட்டர்/பைக்-ஐ அறிமுகப்ப்டுத்தியுள்ளது.
  • ஜாண்டி பிளஸ் சராசரியாக 120 கிலோமீட்டர் தூரத்தை வழங்குகிறது.
Jaunty Plus 120: அறிமுகம் ஆனது அட்டகாசமான மின்சார பைக், விவரங்கள் இதோ title=

ஜாண்டி மின்சார ஸ்கூட்டர்: நாட்டில் மின்சார ஸ்கூட்டர்களுக்கான தேவை மிக வேகமாக உயர்ந்துள்ளது. பல பெரிய ஆட்டோ நிறுவனங்கள் சிறந்த அம்சங்களுடன் மின்சார ஸ்கூட்டர்களை தொடர்ந்து அறிமுகப்படுத்துகின்றன. இதற்கிடையில், எலக்ட்ரிக் மொபிலிட்டி பிராண்டான ஏ.எம்.ஓ எலக்ட்ரிக் பைக்ஸ் அதன் புதிய மின்சார ஸ்கூட்டர்/பைக் ஜாண்டி பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 

நிறுவனம் சிறந்த வடிவமைப்புடன் இந்த ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இந்த ஸ்கூட்டரில் சிறந்த செயல்திறனுடன், பாதுகாப்பு மீதும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இந்த ஸ்கூட்டர்களின் அறிமுகம், நாட்டில் நம்பகமான, நிலையான மற்றும்  மலிவு விலை மின்-மொபிலிட்டி தீர்வுகளை வழங்குவதில் ஏ.எம்.ஓ எலக்ட்ரிக் பைக்குகளின் மற்றொரு குறிப்பிடத்தக்க படியாகும். இந்த இ-ஸ்கூட்டர் தொடர்பான அம்சங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஜாண்டி பிளஸ்சின் விலை என்ன

ஏ.எம்.ஓ எலக்ட்ரிக் பைக்குகள் அதன் புதிய ஜாண்டி பிளஸ் இ-ஸ்கூட்டரை ரூ.1,10,460 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் 3 வருட உத்தரவாதத்தைப் பெறுவார்கள். மேலும் இது 5 வண்ணங்களில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் சிவப்பு-கருப்பு, சாம்பல்-கருப்பு, நீலம்-கருப்பு, வெள்ளை-கருப்பு மற்றும் மஞ்சள்-கருப்பு ஆகிய நிறங்களில் உங்களுக்கு பிடித்தமான ஒரு பைக்கை நீங்கள் தேர்வு செய்யலாம்.

ஜாண்டி பிளஸ் இந்த அம்சங்களைக் கொண்டுள்ளது

ஜாண்டி பிளஸ் எலெக்ட்ரிக் பைக்/ஸ்கூட்டர் சராசரியாக 120 கிலோமீட்டருக்கு மேல் செல்லும். இதை 100% சார்ஜ் செய்ய 4 மணிநேரம் ஆகும். புதுமையான தொழில்நுட்பம் மற்றும் பல அம்சங்களைக் கொண்ட இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர், மின்சார பைக் சக்கரங்களின் ஆற்றலுக்கு முடிவில்லாத சான்றுகளைக் கொண்டுள்ளது. பணிச்சூழலியல் வடிவமைப்பு, ஸ்டைல் மற்றும் தன்மை ஆகியவற்றின் சரியான கலவையான ஜான்டி பிளஸ் 60வி/40ஏ.எஹ் மேம்பட்ட லித்தியம் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

மேலும் படிக்க | 1 முறை சார்ஜ் செய்தால் 200 KM போகலாம்; அற்புதமான பைக்

அதன் ஹை ரன் டிஸ்டன்ஸ் வாடிக்கையாளர்களை நகர்ப்புற சாகசங்களை ஆராய ஊக்குவிக்கிறது. அதிக செயல்திறன் கொண்ட மோட்டார், க்ரூஸ் கன்ட்ரோல் சுவிட்ச், எலக்ட்ரானிக் அசிஸ்டட் பிரேக்கிங் சிஸ்டம் , திருட்டு எதிர்ப்பு எச்சரிக்கை அலாரம், துல்லியமான விவரங்களுடன் கூடிய வலுவான சேஸ்ஸிஸ் ஆகியவை இந்த மின்சார ஸ்கூட்டரில் உள்ளன. டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன், உயர் கிரவுண்ட் கிளியரன்ஸ், சைட் ஸ்டாண்ட் சென்சார்கள், சென்ட்ரல் லாக்கிங், முன்பக்க டிஸ்க் பிரேக், டிஆர்எல் விளக்குகள் மற்றும் எஞ்சின் கில் சுவிட்ச் ஆகியவை இதில் உள்ள மற்ற அம்சங்களாகும்.

ஜாண்டி பிளஸ் சராசரியாக 120 கிலோமீட்டர் தூரத்தை வழங்குகிறது. இது ஒரு பிரஷ் இல்லாத டிசி மோட்டாரைக் கொண்டுள்ளது. இது வேகமாக சார்ஜ் செய்யப்படுகிறது. இதை முழுமையாக சார்ஜ் செய்ய அதிகபட்சம் 4 மணிநேரம் ஆகும். ஜான்டி பிளஸ் மொபைல் யூ.எஸ்.பி சார்ஜிங் போர்ட்டுடன் வருகிறது. இதன் சிறந்த பாதுகாப்பு மற்றும் ஸ்டைலின் காரணமாக இது மற்ற பைக்குகளிடமிருந்து தனித்து நிற்கிறது. இதில் நிலையான மற்றும் கையடக்க பேட்டரி பேக் வசதியும் கிடைக்கிறது. 

மேலும் படிக்க | ஒருமுறை சார்ஜ் 180 கிமீ தூரம் பயணம்! வெறும் ரூ.999 செலுத்தி புதிய பைக்...

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News