Ajith Kumar Next Movie Director : தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் அஜித்குமார், விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என 2 படங்களில் அடுத்தடுத்து நடித்து முடித்திருக்கிறார். இந்த நிலையில், அவர் எந்த இயக்குநருடன் அடுத்து கைக்கோர்க்க இருக்கிறார் என்பது குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.
அஜித் படத்திற்கு பிரச்சனை:
நடிகர் அஜித் கடைசியாக நடித்து வெளிவந்த படம், துணிவு. இந்த படத்திற்கு பிறகு கையோடு விடாமுயற்சி படத்தில் சைன் செய்த அவர், அந்தப் படத்தில் நடிப்பதிலேயே தனது ஓராண்டினை செலவிட்டார். இடையிடையே பைக் டூர் செல்வது, குடும்பத்துடன் வெகேஷன் சொல்வது என்று ரிலாக்ஸாகவும் இருந்தார்.
ஆரம்பத்தில் இருந்தே சிலை நாட்களைக் கடந்து வந்த பலவித பிரச்சனைகளை சந்தித்து வந்த படம், விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கிய இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். அர்ஜுன், ரெஜினா கசான்ட்ரா ஆகியோர் இப்படத்தில் நெகடிவ் கதாப்பாத்திரத்தில் நடிக்க, ஆரவ் முக்கிய பாத்திரமாக வருகிறார். இந்த படத்தின் அப்டேட்கள் ஒவ்வொன்றும் வருவதற்கே பல மாதங்கள் பிடித்த நிலையில், இறுதியாக சில நாட்களுக்கு முன்னர் ரிலீஸ் தேதி வெளியானது. பொங்கலுக்கு வெளியாவதாக உறுதி செய்யப்பட் இந்த படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குட் பேட் அக்லி:
விடாமுயற்சி படத்தில் நடித்து கொண்டிருந்த போதே அஜித் கமிட் ஆன படம், குட் பேட் அக்லி. இதனை, இயக்குநரும் அஜித்தின் தீவிர ரசிகருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். விடாமுயற்சி போல விடாமல் இழுத்தடிக்காமல் இதன் படப்பிடிப்பு சட்டென சுமார் 5 மாத இடைவேளைக்குள் நடந்து முடிந்தது. இந்த படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் அஜித் வித்தியாசமான மூன்று விதமான தோற்றங்களில் வருகிறார். இந்த படம், வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியீட்டிற்காக தயாராகி வருகிறது.
அடுத்த இயக்குநர் யார்?
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பும் முடிந்து விட்டது, குட் பேட் அக்லி படத்திலும் அஜித் நடித்து முடித்து விட்டார். அடுத்து அவர் என்ன செய்யப்போகிறார் என ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். காரணம், அவருக்கு போட்டி நடிகராக கருதப்பட்ட விஜய் இன்னும் சில மாதங்களில் முழுமையாக சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபட இருக்கிறார். இந்த நிலையில், அஜித் மற்றும் ரஜினியின் படங்களைத்தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக்கொண்டுள்ளனர். இவர், மீண்டும் சிறுத்தை சிவாவுடன் சேர்ந்து ஒரு படத்தில் பணியாற்ற இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் கங்குவா படத்திற்கு பிறகு, அந்த நிலை மாறிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அஜித் எந்த இயக்குநருடன் கைக்காேர்க்க இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாக இருக்கிறது.
அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது வெங்கட் பிரபு எனக்கூறப்பட்டது. இதையடுத்து, தற்போது அவர் தேசிங்கு பெரியசாமியிடம் கதை கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவர், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கியருக்கிறார். ஒன் லைன் கதையை கேட்டு இம்ப்ரஸ் ஆன அஜித், இதற்கு ஓகே கூறியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க | விடாமுயற்சி படத்தின் புதிய ரிலீஸ் தேதி என்ன? ‘இந்த’ மாதத்தில் வெளியாக வாய்ப்பு!
மேலும் படிக்க | அஜித்தின் மேனேஜருடன் விஜய் மகன் சஞ்சய்! தோள் மேல் கைப்போட்டு எடுத்த போட்டோ வைரல்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ