ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கும் டாப் 5 மொபைல்கள்

10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் டாப் 5 மொபைல்களைக் காணலாம். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 13, 2022, 05:52 PM IST
  • பட்ஜெட் விலையில் கிடைக்கும் மொபைல்கள்
  • 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும்
  • கேமார உள்ளிட்ட அம்சங்கள் சூப்பராக இருக்கிறது
ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கும் டாப் 5 மொபைல்கள் title=

10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் இருக்கும் மொபைலை பலர் தேடுகின்றனர். டூயல் சிம், மற்றும் குவாட் ரியர் கேமராக்கள், FHD+ டிஸ்ப்ளேக்கள் மற்றும் கைரேகை சென்சார்கள் போன்ற அம்சங்களுடன் கூடிய மொபைல் தான் மக்களின் விருப்பமாகவும் உள்ளது. அப்படியான அம்சங்களில் ரூ.10,000-க்குள் இருக்கும் டாப் மொபைல்களை இங்கே காணலாம்.   

ரெட்மி 9 பிரைம்

ரெட்மீ 9 பிரைம் மொபைல் 10,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும். கிராஃபிக்ஸைக் குவாலிட்டியைக் குறைக்காமல் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய மொபைல்களில் இதுவும் ஒன்று. கேமிங் விளையாடக்கூடியவர்களுக்கு இது சூப்பரான மொபைல். 13எம்பி குவாட்-கேமரா செட்-அப் மற்றும் FHD+ LCD டிஸ்ப்ளே ஆகியவை இருக்கும். சியோமி நிறுவனத்தின் பிராண்டான இந்த மொபைல், மார்க்கெட்டில் அதிக விற்பனையான மொபைலாகும். 

மேலும் படிக்க | சாலை விபத்தை தடுக்க வரும் புது டெக்னாலஜி

ரெட்மி 9

10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் மார்க்கெட்டில் கிடைக்கும் மற்றொரு சிறந்த மொபைல் ரெட்மி 9.  சில அதிக கிராபிக்ஸ் திறன் கொண்ட கேம்களைக் கூட இந்த மொபைலில் விளையாட முடியும். ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹை டெபினிஷன் (FHD) டிஸ்ப்ளே கொண்டது. 13MP குவாட்-கேமரா ஸ்டேக் மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5020mAh பேட்டரி ஆகியவை இருக்கும். 

ரெட்மீ 8A டூயல்

ரெட்மீ 8A டூயல் ஸ்மார்ட்போன் செல்பி மற்றும் கிளியரான புகைப்படங்களை எடுக்க உதவும். வலிமையான பேட்டரியையும், நீண்ட லைஃபையும் கொண்டது இந்த ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் என்று கூட சொல்லலாம். 8 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய போன்களில்  5000 mAh பேட்டரியை கொண்ட ஸ்மார்ட்போன் இது. கொரில்லா கிளாஸ் 5 இருக்கும் ஸ்மார்ட்போன்18W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கேமராவைப் பொறுத்த வரை 13MP டூயல் பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது. இந்த போனை www.amazon.in-ல் வாங்கலாம்.

மேலும் படிக்க | உலக ரேங்கிலும் கோலோச்சும் ரிலையன்ஸ் - இந்தியாவில் டாப்

ரியல்மீ நஸரோ 10 ஏ

Narzo 10A ஸ்மார்போன் 10,000 ரூபாய்க்கும் கீழே கிடைக்கக்கூடிய ரியல்மீ சீரிஸின் மற்றொரு ஸ்மார்ட்போன். பட்ஜெட் விலையில் கிடைக்கூடிய இந்த ஸ்மார்ட்போன் ஹை ரெசல்யூசனுக்கு இணையாக வேலை செய்யும். பப்ஜி கேம்களைக் கூட இந்த ஸ்மார்ட்போனில் விளையாடலாம். இந்த அம்சங்களுடன் கூடுதல் விலையில் கிடைக்கக்கூடிய போன்களுக்கு மார்க்கெட்டில் குறைந்த விலையில் கடும் போட்டியைக் கொடுத்து வருகிறது.  

விவோ U10 32GB 

பட்ஜெட் விலையில் மொபைல் தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த மொபைல் ஆகும். 6.35 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல் மற்றும் பெரிய 5000 எம்.ஏ.எச் பேட்டரியைக் கொண்டிருக்கும். பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. இதில் 13எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். தொலைபேசியின் முன்பக்கத்தில் 8MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது. 8990 ரூபாய்க்கு கிடைக்கும். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News