உலக ரேங்கிலும் கோலோச்சும் ரிலையன்ஸ் - இந்தியாவில் டாப்

ஃபோர்ப்ஸ் குளோபல் 2000 பட்டியில் ரிலையன்ஸ் கம்பெனி இந்திய அளவில் முதல் இடத்தையும், உலகளவில் 53வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : May 13, 2022, 03:38 PM IST
  • ரிலையன்ஸ் நிறுவனம் டாப் 1
  • உலகளவிலும் கோலோச்சுகிறது
  • அதானி நிறுவனமும் அசுர வளர்ச்சி
உலக ரேங்கிலும் கோலோச்சும் ரிலையன்ஸ் - இந்தியாவில் டாப்  title=

இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்ரேட் கம்பெனியான ரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. டெக்ஸ்டைல் துறையில் முதன்முதலாக கால்பதித்த  அந்த நிறுவனம் படிப்படியாக பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் துறையில் இறங்கி, இப்போது அனைத்து துறைகளிலும் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான ஊழியர்கள் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் படிக்க | கார் வாங்க சரியான நேரம்: மே மாதத்தில் டாடா கார்களில் அசத்தும் தள்ளுபடிகள்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெலிகாம் துறையிலும் கால்பதித்தது. ஜியோ நிறுவனத்தைத் தொடங்கி, இந்திய அளவில் டெலிகாம் துறையில் முன்னணியில் உள்ளது. ஏர்டெல் மற்றும் வோடோஃபோன் ஐடியா நிறுவனங்களுக்கு கடும் போட்டியளிக்கும் விதமாக பல்வேறு அசத்தலான ஆஃபர்களை வழங்கிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், உலகளவில் நிகர சொத்துமதிப்பு மற்றும் வருவாயின் அடிப்படையில் கம்பெனிகளை வரிசைப்படுத்தியது.

அதனடிப்படையில், இந்தியளவில் முதல் இடத்தை ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனம் பிடித்துள்ளது. இந்தியாவில் மார்ச் 2022 முதல் ஏப்ரல் 2022-க்கு இடைப்பட்ட காலத்தில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டிய முதல் நிறுவனம் என்ற சிறப்பை பெற்றிருக்கும் நிறுவனம், உலகளவில் 53வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் போர்ப்ஸ் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 90.7 அமெரிக்க பில்லியன் டாலர்களுடன் இருந்தார். இதன்மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 10வது இடத்தில் இருந்தார். 

இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனங்கள் பட்டியலில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) 2வது இடத்தில் உள்ளது. இதேபோல், தனியார் துறை வங்கிகளான ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி ஆகியவை குளோபல் 2000 இந்திய நிறுவனங்களின் பட்டியலில் அடுத்த இடத்தைப் பிடித்துள்ளன. இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானியின் நிறுவனங்களான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட், அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் மற்றும் அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் ஆகியவை பட்டியலில் சில குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றிருப்பதாகவும் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் கௌதம் அதானி வருவாயில் வாரன் பஃபெட்டை கடந்து உலகின் 5வது பணக்காரர் என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்தார். எண்ணெய் மற்றும் எரிவாயு, உலோக கூட்டு நிறுவனங்களைக் கொண்டிருக்கும் வேதாந்த லிமிடெட்ட 703 இடங்கள் உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க | சாலை விபத்தை தடுக்க வரும் புது டெக்னாலஜி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News