Reliance Jio வழங்கும் மலிவான மாதாந்திர - வருடாந்திர திட்டங்கள்... பயனர்கள் ஹாப்பி!!

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோனின் சிறந்த மாதாந்திர மற்றும் வருடாந்திரத் பிர்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றிய தகவலை அறிந்து கொள்வது வாடிக்கையாளர்களுக்கு  உதவிகரமாக இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 12, 2024, 01:12 PM IST
  • இலவச 5ஜியை பயன்படுத்தும் வசதிக்கு ஜியோ சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
  • ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் - ஐடியா வழங்கும் மாதாந்திர திட்டங்கள் விபரம்.
  • ஜியோ அனைத்து திட்டங்களின் கட்டணங்களையும் 12 முதல் 27% வரை உயர்த்தியது.
Reliance Jio வழங்கும் மலிவான மாதாந்திர - வருடாந்திர திட்டங்கள்... பயனர்கள் ஹாப்பி!! title=

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் சமீபத்தில் தங்கள் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. ஜியோ அதன் அனைத்து திட்டங்களின் கட்டணங்களையும் 12 முதல் 27% வரை உயர்த்தியது. ஆனால் அழைப்பிற்கான நிமிடங்கள் மற்றும் இலவச டேட்டா போன்ற வசதிகளில் மாற்றம் ஏதும் இல்லை. இருப்பினும், இலவச 5ஜியை பயன்படுத்தும் வசதிக்கு ஜியோ சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

இந்நிலையில், அதிகரித்துள்ள கட்டணங்களால், வாடிக்கையாளர்கள் மலிவான திட்டங்களைக் கண்டறிந்து, அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்பு வசதியைப் பெறும் திட்டங்களை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோனின் சிறந்த மாதாந்திர மற்றும் வருடாந்திரத் பிரீபெய்ட் திட்டங்களைப் (Mobile Recharge Plans) பற்றிய தகவலை அறிந்து கொள்வது வாடிக்கையாளர்களுக்கு  உதவிகரமாக இருக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் - ஐடியா வழங்கும் மாதாந்திர திட்டங்கள் விபரம்

ரிலையன்ஸ் ஜியோ மாதாந்திர திட்ட விபரம்

மாதந்திர பிளானிற்கான கட்டணம் : ரூ.249
பேக் செல்லுபடியாகும் காலம்: 28 நாட்கள்
அதிவேக டேட்டா: 1 ஜிபி/நாள்
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்
SMS: 100 SMS/நாள்
பிற நன்மைகள்: ஜியோ டி, ஜியோ, சினிமா, ஜியோ கிளவுட்

ஏர்டெல் மாதாந்திர திட்ட விபரம்

மாதந்திர பிளானிற்கான கட்டணம் : ரூ.199
பேக் செல்லுபடியாகும் காலம்: 28 நாட்கள்
மொத்த டேட்டா: 2 ஜிபி
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்
SMS: 100 SMS/நாள்
பிற நன்மைகள்: இலவச ஹலோ ட்யூன், வின்க் ம்யூசிக்

மேலும் படிக்க | BSNL வழங்கும் ரூ.300-க்கும் குறைவான ப்ரீபெய்ட் பிளான்கள்... போர்ட் செய்வது எப்படி..!!

வோடபோன் மாதாந்திர திட்ட விபரம்

மாதந்திர பிளானிற்கான கட்டணம் : ரூ.299
பேக் செல்லுபடியாகும் காலம்: 28 நாட்கள்
அதிவேக டேட்டா: 1 ஜிபி/நாள்
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்
SMS: 100 SMS/நாள்
பிற நன்மைகள்:  எதுவும் இல்லை.

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் - ஐடியா வழங்கும் வருடாந்திர திட்டங்கள் விபரம்

ரிலையன்ஸ் ஜியோ வருடாந்திர திட்ட விபரம்

மாதந்திர பிளானிற்கான கட்டணம் : ரூ.3,599
பேக் செல்லுபடியாகும் காலம்: 365 நாட்கள்
அதிவேக டேட்டா: 2 ஜிபி/நாள்
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்
SMS: 100 SMS/நாள்
பிற நன்மைகள்: ஜியோ டி, ஜியோ, சினிமா, ஜியோ கிளவுட்

ஏர்டெல் வருடாந்திர திட்ட விபரம்

மாதந்திர பிளானிற்கான கட்டணம் : ரூ.1,999
பேக் செல்லுபடியாகும் காலம்: 365 நாட்கள்
மொத்த டேட்டா: 24 ஜிபி
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்
SMS: 100 SMS/நாள்
பிற நன்மைகள்: இலவச ஹெலோட்யூன், அப்பல்லோ 24/7 சர்க்கிள்

வோடபோன் வருடாந்திர திட்ட விபரம்

மாதந்திர பிளானிற்கான கட்டணம் : ரூ.299
பேக் செல்லுபடியாகும் காலம்: 28 நாட்கள்
அதிவேக டேட்டா: 1 ஜிபி/நாள்
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்
SMS: 100 SMS/நாள்
பிற நன்மைகள்: அன்லிமிடெட் நைட் டேட்டா, வார இறுதி டேட்டா ரோல்ஓவர், ஒவ்வொரு மாதமும் 2ஜிபி வரை பேக்அப் டேட்டா

மேலும் படிக்க | சாம்சங் முதல் ஒன்பிளஸ் வரை... அமேசான் பிரைம் டே சலுகை விற்பனையில் மலிவாக வாங்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News