Tata Nexon EV: இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளதாலும், வாகனங்களை இயக்குவதில் எரிபொருள் செலவு அதிகமாக வருவதாலும் மக்கள் கலக்கமடைந்துள்ளனர். இருப்பினும், இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் சிக்கனமான மின்சார வாகனங்களுக்கு மாறுவது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களை ஒப்பிடும்போது மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவாக உள்ளது. இது உங்கள் பணத்தை நீங்கள் சேமிக்க உதவும்.
தற்போது, இந்தியாவில் பலர் மின்சார வாகனங்களுக்கு (Electric Vehicles) மாற தயாராக உள்ளனர். நீங்களும் மின்சார வாகனங்களின் பக்கம் உங்கள் கவனத்தை திருப்பியிருந்தால், இது உங்களுக்கான பதிவாக இருக்கும். இந்த பதிவில் ஒரு அற்புதமான மின்சார வாகனத்தைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். இந்த வாகனம் வெறும் ரூ.290 செலவில் 500 கிமீ வரை பயணிக்கும்.
Tata Nexon EV: விலை, விவரக்குறிப்புகள் & பயண வரம்பு
Tata Nexon EV-யின் விலை ரூ.14,24,000 முதல் தொடங்குகிறது. இந்த கார் 0 முதல் 100 கிமீ வேகத்தை 9.9 வினாடிகளில் எட்டிவிடும். இந்த கார் நிரந்தர மேக்னட் ஏசி மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இது 245 என்எம் உச்ச முறுக்குவிசையை உருவாக்குகிறது. காரில் IP67 சான்றளிக்கப்பட்ட 30.2 kWh லித்தியம் அயன் பேட்டரி உள்ளது.
ALSO READ | Electric Car: உங்கள் மின்சார காரின் வரம்பு குறையாமல் இருக்க உதவும் சூப்பர் டிப்ஸ்
வேகமான சார்ஜர் மூலம், இந்த காரை 1 மணிநேரத்தில் 80% வரை சார்ஜ் செய்ய முடியும். நீங்கள் வீட்டு சார்ஜரைப் பயன்படுத்தினால், பேட்டரி முழுவதுமாக சார்ஜ் ஆக 8 மணிநேரம் ஆகும். முழு சார்ஜில், Tata Nexon EV ஆனது 312 கிமீ வரை பயணிக்க முடியும், அதாவது இந்த பைக், ஒருமுறை சார்ஜ் செய்தால் 312 கிமீ ஓட்டும் திறன் கொண்டது.
Tata Nexon EV: ஒரு கிலோமீட்டருக்கான விலை
இந்த SUV-வில் 30.2 kwh பேட்டரி உள்ளது. அதாவது, இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்ய, 30.2 யூனிட் மின்சாரம் செலவாகும். ரூ.6/யூனிட் மின்சாரம் என்ற விகிதத்தைக் கருத்தில் கொண்டால், இந்த கார் ஒருமுறை முழு சார்ஜ் ஆக ரூ.181.2 செலவாகும். சார்ஜ் ஆனவுடன் 312 கி.மீ வரை இது பயணிக்கும். இந்த வகையில், அதன் விலை ஒரு கிலோமீட்டருக்கு சுமார் 58 பைசாவாக உள்ளது. ஆகையால், இந்த வழியில் பார்த்தால், இந்த காரை (Electric Car) 500 கிமீ ஓடுவதற்கு ரூ.290 மதிப்புள்ள மின்சாரம் செலவாகும் என்று கூறலாம்.
ALSO READ:Maruti Suzuki மின்சார கார்: எப்போது அறிமுகம்? விவரம் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G