பில் கேட்ஸ் மைக்ரோசாப்டின் இயக்குநர்கள் குழுவிலிருந்து விலகினார்

மைக்ரோசாப்ட் வெள்ளிக்கிழமை (local time) அதன் இணை நிறுவனர் பில் கேட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிலிருந்து விலகியிருப்பதாக அறிவித்தார். 

Last Updated : Mar 14, 2020, 09:03 AM IST
பில் கேட்ஸ் மைக்ரோசாப்டின் இயக்குநர்கள் குழுவிலிருந்து விலகினார் title=

மைக்ரோசாப்ட் வெள்ளிக்கிழமை (local time) அதன் இணை நிறுவனர் பில் கேட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிலிருந்து விலகியிருப்பதாக அறிவித்தார். 

இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதெல்லா (Satya Nadella) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பில் கேட்ஸ் உலக அளவில் சுகாதாரம், கல்வி, காலநிலை மாற்றம் ஆகியவை தொடர்பான பணிகளில் ஈடுபட உள்ளதாக அவர் கூறியுள்ளார். தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா மற்றும் நிறுவனத்தின் பிற தலைவர்களின் தொழில்நுட்ப ஆலோசகராக அவர் தொடர்ந்து பணியாற்றுவார். பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் அதிகமான நேரம் செலவிடுவதற்காக இயக்குநர் குழுவிலிருந்து விலகியதாகவும் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகத்தையே கணினிமயமாக மாற்றியுள்ள மைக்ரோ சாஃட் நிறுவனத்தை, தனது பால்ய கால நண்பர் பால் ஆலனுடன் இணைந்து 1975-ம் ஆண்டு நிறுவினார் பில் கேட்ஸ். 2000-வது ஆண்டு வரை மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். 2008 ஆம் ஆண்டில், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் தனது பணியில் அதிக நேரம் செலவழிக்க கேட்ஸ் நிறுவனத்தில் அன்றாட பாத்திரத்திலிருந்து வெளியேறினார்.

பில்கேட்ஸ் 'பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ்' என்ற அமைப்பை ஏற்படுத்தி இந்தியா உள்பட பல நாடுகளில் மருத்துவம் மற்றும் குழந்தைகள் நலனுக்கான ஊட்டச்சத்துகளை அளிப்பதிலும், வாழ்வியலை அழகானதாக மாற்றும் துாய்மை ஆகிய சேவைகளை செய்து வருகிறார்.

Trending News