BSNL 12 மாத ரீசார்ஜ் திட்டம்: அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் எப்போதும் அதன் பயனர்களுக்கு நல்ல மற்றும் மலிவான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் அனைவரும் அவர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப ரீசார்ஜ் செய்துக்கொள்ள ஏதுவான திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் கொண்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் அளித்து வரும் மலிவான திட்டங்கள் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடா-ஐடியா நிறுவனத்திற்கு கடுமையான போட்டியாக உள்ளன. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கைப் பயன்படுத்துகின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னுனும் 3G நெட்வொர்க்கை வழங்குகிறது. அதே நேரத்தில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு 5G நெட்வொர்க்கை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் பிஎஸ்என்எல் வாடிக்கையாளராக இருந்து, உங்களுக்காக ஒரு நல்ல மற்றும் மலிவான திட்டம் தேவைப்பட்டால், அத்தகைய ஒரு திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்த பிறகு, ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த திட்டத்தில், பயனர்கள் வரம்பற்ற டேட்டா, அழைப்பு, எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகளைப் பெறுகின்றனர். இந்தத் திட்டத்தைப் பற்றிய முழுமையான தகவலை இங்கு அறிந்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க: பிஎஸ்என்எல் ரூ. 269 ரீசார்ஜ் பிளான்: தினமும் 2ஜிபி தரவு, எக்கச்சக்க நன்மைகள்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மலிவான திட்டம்
BSNL இன் ரூ.1499 திட்டமானது 365 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. அதாவது இந்த திட்டத்தை நீங்கள் ஒரு வருடத்திற்கு பயன்படுத்தலாம். இந்த திட்டத்தின் விலை பற்றி பேசினால், அடிப்படையில் ஒரு நாளைக்கு நீங்கள் 4 ரூபாய் 1 பைசா செலவழிக்க வேண்டியிருக்கும். இந்த மலிவான திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதியை பெறுவீர்கள். இதில் உள்ள சிறந்த விஷயம் என்னவென்றால், இந்த திட்டத்தில், இணையத்தைப் பயன்படுத்த மொத்தம் 24 ஜிபி டேட்டா கிடைக்கிறது. உங்கள் தேவைக்கேற்ப இந்தத் தரவை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
வாடிக்கையாளர்கள் விரும்பினால், தாங்கள் பெறும் தரவை ஒரு வாரத்திற்கு அல்லது ஒரு வருடத்திற்கு கூட பயன்படுத்தலாம். இருப்பினும், உங்களுக்கு தினசரி டேட்டா தேவைப்பட்டால், இந்தத் திட்டம் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். அதே நேரத்தில், இந்த ரீசார்ஜில், அனைத்து நெட்வொர்க்குகளிலும் பேச வரம்பற்ற அழைப்பு வசதி உள்ளது.
மேலும் படிக்க: ரூ 139 ரீசார்ஜ் பிளான்..டெய்லி 2ஜிபி டேட்டா..அசரவைக்கும் பிஎஸ்என்எல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ