வெறும் ரூ.499க்கு அசத்தலான சாம்சங் போனை வாங்க அரிய வாய்ப்பு

அமேசானில் Fab Phones Fest விற்பனை தொடங்கியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 10, 2022, 03:21 PM IST
  • அமேசானில் Fab Phones Fest விற்பனை தொடங்கியுள்ளது.
  • இந்த விற்பனை ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நடைபெறும்.
  • Samsung Galaxy M12 ஐ 500 ரூபாய்க்கும் குறைவாக வாங்கலாம்.
வெறும் ரூ.499க்கு அசத்தலான சாம்சங் போனை வாங்க அரிய வாய்ப்பு title=

அமேசானில் ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் விற்பனை இன்று முதல் அதாவது ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 14 வரை நடைபெறும். இந்த விற்பனையில், நீங்கள் ஸ்மார்ட்போன்கள் மீது அற்புதமான தள்ளுபடிகள் பெறலாம். மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களை இங்கு நீங்கள் மலிவாக வாங்க முடியும். சலுகைகளைப் பெறுவதன் மூலம் குறைந்த விலையில் தொலைபேசியை வாங்கலாம். அதன்படி சாம்சங் கேலக்ஸி எம்12 மிகவும் பிரபலமான போன் ஆகும். இதில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, சக்திவாய்ந்த 6000எம்ஏஎச் பேட்டரி மற்றும் சிறந்த 48எம்பி கேமரா உள்ளது. இந்த விற்பனையில், சாம்சங் கேலக்ஸி எம்12 ஐ 500 ரூபாய்க்கும் குறைவாந விலையில் வாங்கலாம். எப்படி என்று பார்போம்... 

சாம்சங் கேலக்ஸி எம்12 சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
சாம்சங் கேலக்ஸி எம்12 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாட்டின் தொடக்க விலை ரூ. 12,999 ஆகும். ஆனால் அமேசானில் இந்த செல்போனை ரூ.9,499க்கு வாங்கலாம். அதாவது போனில் ரூ.3,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதற்குப் பிறகு ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது, இதன் காரணமாக போனின் விலை கணிசமாகக் குறையும்.

மேலும் படிக்க | புதிய சோஷியல் மீடியா தளத்தை தொடங்குகிறாரா எலான் மஸ்க்? அவரே கூறிய பதில்

சாம்சங் கேலக்ஸி எம்12 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
சாம்சங் கேலக்ஸி எம்12 இல் 9 ஆயிரம் ரூபாய் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உள்ளது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இந்த பண்பார் தள்ளுபடி பெறலாம். ஆனால் உங்கள் பழைய போன் நல்ல நிலையில் இருந்து, லேட்டஸ்ட் மாடலாக இருந்தால் மட்டுமே 9 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கும். அதன்படி முழு சலுகையும் பயன்படுத்தினால் போனின் விலை ரூ.499 ஆக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எம்12 ஆனது நோ காஸ்ட் இஎம்ஐ இல் கிடைக்கிறது
சாம்சங் கேலக்ஸி எம்12 ஐ நோ காஸ்ட் இஎம்ஐ மூலமாகவும் வாங்கலாம். நோ காஸ்ட் இஎம்ஐ என்றால் நீங்கள் போனுக்கு எந்த வட்டியும் செலுத்த வேண்டியதில்லை. எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு மூலம் இஎம்ஐயில் போனை வாங்கினால், 24 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.452 செலுத்த வேண்டும். ஆனால் இதற்காக வங்கியில் செயலாக்க கட்டணமாக ரூ.199 செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | ஐபிஎல் முன்னிட்டு ஒரு வருடத்திற்கு ஹாட்ஸ்டார் சந்தா இலவசம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News