மத்திய அரசின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மஹாபலிபுரம் சுற்றுளா தளத்திற்கு புதிய இணையப் பக்கம் உறுவாக்கப்படவுள்ளது!
2018-19 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட அறிவிப்புகளுக்கு இணங்க, ஐக்கோனிக் சுற்றுலா தளங்கள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்திக்காக நாட்டிலுள்ள 12 கிளஸ்டர்களில் 17 இடங்களை சுற்றுலா அமைச்சு தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் அபிவிருத்தி செய்யப்படவிருக்கும் 17 தளங்கள் பட்டியல் பின்வருமாறு:-
- உத்தரப் பிரதேசம்- தாஜ்மஹால் & ஃபதேபூர் சிக்ரி;
- மகாராஷ்டிரா- அஜந்தா & எல்லோரா;
- டெல்லி - ஹூமாயூன் கல்லறை, செங்கோட்டை & குதுப் மினார்;
- கோவா- கோல்வா கடற்கரை;
- ராஜஸ்தான் - அமர் கோட்டை;
- குஜராத்- சோம்நாத் & டோலாவிரா;
- மத்தியப் பிரதேசம்- கஜுராஹோ;
- கர்நாடகா- ஹம்பி;
- தமிழ்நாடு - மஹாபலிபுரம்;
- அசாம்- காஸிரங்கா;
- கேரளா - குமரகம்;
- பீகார்- மஹாபோதி.
சுற்றுளா பயணிகளுக்கு தேவையான வசதிகள், அனுபவம், உள்ளூர் சமூகத்தின் ஈடுபாடு, பதவி உயர்வு மற்றும் வர்த்தக முறைகள் ஆகியவற்றிற்கான இலக்கு மற்றும் சிறந்த அனுபவங்கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தி மேற்கூறப்பட்ட தளங்கள் மேம்படுத்தப்படும் என மத்திய சுற்றுள்ளாத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் நினைவுச்சின்னங்கள் இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு மையம் மற்றும் மாநில தொல்லியல் துறையின் அதிகார எல்லைக்குள் வருகின்றன. இந்த நினைவுச்சின்னங்கள் ஏ.எஸ்.ஐ. மற்றும் மாநில அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதோடு, அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் உலகளாவிய அணுகல், நினைவுச்சின்னங்களில் தூய்மைப்படுத்துதல், பசுமை தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மேம்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் கே. ஜே. அல்போன்ஸ், இன்று ராஜ்யசபா கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளார்.