கொரோனா வைரஸ்: பொதுமக்களை குறி வைக்கும் சைபர் குற்றவாளிகள் இன்டர்போல் போலீஸ் எச்சரிக்கை

சைபர் கிரைம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு நாடு முழுவதும் உள்ள காவல்துறைத் தலைவருக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 7, 2020, 11:02 PM IST
  • சைபர் குற்றவாளிகள் கொள்ளையடிக்க கொரோனாவைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • சைபர் குற்றவாளிகள் கொள்ளையடிக்க கொரோனாவைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • இன்டர்போல் அனைத்து 194 உறுப்பு நாடுகளுக்கும் சைபர் கிரைம் குறித்து ஒரு கடிதம் எழுதியது.
கொரோனா வைரஸ்: பொதுமக்களை  குறி வைக்கும் சைபர் குற்றவாளிகள் இன்டர்போல் போலீஸ் எச்சரிக்கை title=

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபக்கம் கொரோனா பயம், மறுபக்கம் மோசடி அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது. சைபர் கிரைம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு நாடு முழுவதும் உள்ள காவல்துறைத் தலைவருக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. உண்மையில், இந்த கடிதம் இன்டர்போல் எச்சரிக்கைக்குப் பிறகு சிபிஐ தரப்பில் அனுப்பப்பட்டு உள்ளது. குற்றவாளிகளின் இணைய தாக்குதல் குறித்து எச்சரிக்கையாக இருக்க அனைத்து 194 உறுப்பு நாடுகளுக்கும் இன்டர்போல் ஒரு கடிதம் எழுதியுள்ளது.

இந்தியாவில் சிபிஐ இன்டர்போலின் நோடல் ஏஜென்சி, மூலம் சைபர் தாக்குதல் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இந்திய காவல்துறையினரிடம் இண்டர்போல் கேட்டுக் கொண்டுள்ளது. கோவிட் -19 நாட்டில் பரவியுள்ள விதம் மற்றும் அதன் தடுப்புக்காக அரசாங்கங்கள், சுகாதாரத் துறை மற்றும் காவல்துறை ஈடுபட்டுள்ளதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது. பல நாடுகளிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், குற்றவாளிகள் குற்றம் செய்ய புதிய வழிகளைக் கண்டறிந்துள்ளனர்.

இன்டர்போல் வழங்கிய எச்சரிக்கையின்படி, குற்றவாளிகள் இப்போது போலி வலைத்தளங்கள், டோமின், தீம்பொருள் மூலம் மருத்துவமனையின் அமைப்பை ஹேக் செய்யப்படலாம், அப்படி ஹேக் செய்த பிறகு, அவர்கள் கேட்கும் தொகையை செலுத்திய பின்னரே, மருத்துவமணியின் கணினியை விடுவிப்போம் எனக் கூறுவார்கள். ஏனெனில் மருத்துவமனையில் நோயாளிகள் தொடர்பான முக்கியமான கோப்பு இருக்கலாம். இதனால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இல்லையெனில் சிக்கல்கள் ஏற்படலாம்.

இதன் மூலம் சைபர் குற்றவாளிகள் மக்களைக் கொள்ளையடிக்க முடியும். போலி பிபிஇ [PPE] உபகரணங்களை சுகாதாரத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு விற்கப்படலாம். அத்தியாவசிய மருந்துகளின் பெயரில் மோசடி செய்யலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மருந்துகளை கடத்த முடியும்.

கடன் கொடுக்கும் பெயரில் அல்லது மலிவான ஈ.எம்.ஐ என்ற பெயரில் நீங்கள் மோசடிக்கு உள்ளாகலாம். இந்த நேரத்தில் உலகில் பரவும் தொற்றுநோயைப் பயன்படுத்தி குற்றவாளிகள் மக்களை ஏமாற்றக்கூடிய அனைத்து வழிகளும் இவைதான். ஆனால் இது தவிர, குற்றவாளிகள் குற்றங்களைச் செய்யும் முறையும் மாறுகிறது என்று இன்டர்போல் கூறியுள்ளது.

இந்த நேரத்தில் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் மக்கள் வீடுகளில் உள்ளனர். ஆனால் நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. குற்றவாளிகள் இதைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கலாம். 

இதனால் அனைத்து நாடுகளுக்கும் இன்டர்போல் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன் அடிப்படையில் CBI அனைத்து மாநிலங் காவல்துறைக்கும் உஷாராக இருக்கும்படி கேட்டுக்கொண்டு உள்ளது.

Trending News