FASTag App: இனி toll plaza வாகன நெரிசல் குறித்து முன்னரே அறியலாம், இன்னும் பல நன்மைகள் இதோ

FASTag மூலம் சுங்கச் சாவடிகளில் தினமும் 95 கோடி ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. டிஜிட்டல் டோல் சேகரிப்பு மூலம் டோல் பிளாசாக்களில் போக்குவரத்து நெரிசல்களை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் விரும்புகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 4, 2021, 08:25 PM IST
  • டோல் பிளாசா ஆன்லைன் கண்காணிப்பு அமைப்பு செயலி தொடங்கப்பட்டது.
  • வாகன ஆவணங்கள் RFID மூலம் ஸ்கேன் செய்யப்படும்.
  • FASTag பாதையில் காத்திருப்பு நேரம் வேகமாக குறைந்து வருகிறது.
FASTag App: இனி toll plaza வாகன நெரிசல் குறித்து முன்னரே அறியலாம், இன்னும் பல நன்மைகள் இதோ  title=

FASTag Latest News: சில நாட்களுக்கு முன்னர் அறிமுகமான Fastag, வாகன ஓட்டுனர்களுக்கும், நிர்வாகத்துக்கும், போக்குவரத்து துறைக்கும் செயல்முறைகளை வெகுவாக எளிதாக்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் FASTag கட்டாயமாகிவிட்டது. FASTag மூலம் சுங்கச் சாவடிகளில் தினமும் 95 கோடி ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. டிஜிட்டல் டோல் சேகரிப்பு மூலம் டோல் பிளாசாக்களில் போக்குவரத்து நெரிசல்களை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் விரும்புகிறது. எதிர்காலத்தில் எப்போதாவது டோல் பிளாசாக்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும் கூட, அரசாங்கம் அதற்கான ஏற்பாடுகளையும் செய்வது பற்றி சிந்தித்துள்ளது.

டோல் பிளாசா ஆன்லைன் கண்காணிப்பு அமைப்பு செயலி தொடங்கப்பட்டது

அடுத்த முறை நீங்கள் தேசிய நெடுஞ்சாலையில் (Highways) செல்லும்போது, ​​எந்த டோல் பிளாசாவில் எவ்வளவு போக்குவரத்து நெரிசல் உள்ளது என்பதை நீங்கள் முன்கூட்டியே பார்க்கலாம். அதற்கேற்ப நீங்கள் உங்கள் பாதையையும் மாற்றிக்கொள்ளலாம். இதற்காக, சாலை போக்குவரத்து அமைச்சகம் (Ministry of Road Transport) நிகழ்நேர ஆன்லைன் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியில், சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு நிமிடத்திற்குமான புதுப்பிப்புகளை பெறுவீர்கள்.

போக்குவரத்து அதிகரித்தால் FASTag இலகுவாக்கப்படும்

சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் பாதையில் போக்குவரத்து (Traffic) நெரிசல் திட்டமிடப்பட்ட நேரத்தை தாண்டினால், அப்போது, அந்த நெரிசலை உடனடியாக இலகுவாக்க வழி செய்யப்படும். இது குறித்து சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

இதற்காக, பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு என மூன்று வண்ண குறியீடு அமைப்புகள் இருக்கும். ஒரு டோல் பிளாசாவில் போக்குவரத்து சிவப்பு கோட்டைக் கடந்தவுடன், டோல் பிளாசாவின் நெரிசலை இலகுவாக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படும். இருப்பினும், இது இன்னும் ஒரு பைலட் திட்டமாக சோதிக்கப்படுகிறது.

ALSO READ: வாகன ஓட்டுனர்களுக்கு good news: இனி FASTag-ல் minimum balance தேவையில்லை

வாகன ஆவணங்கள் RFID மூலம் சரிபார்க்கப்படும்

வாகனத்தின் ஆவணங்களைக் காட்ட மக்கள் போக்குவரத்து போலீசிடம் செல்ல அவசியமில்லை. உங்கள் வாகன ஆவணங்கள் RFID மூலம் ஸ்கேன் செய்யப்படும். நீங்கள் எங்கும் நிறுத்த வேண்டிய அவசியமும் இருக்காது. இது காவல்துறை மற்றும் பயணிகளின் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.

FASTag காரணமாக காத்திருப்பு நேரம் குறைக்கப்பட்டது

சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சகம் இப்போது FASTag பாதையில் காத்திருப்பு நேரம் வேகமாக குறைந்து வருவதாகக் கூறியுள்ளது. முன்னதாக காத்திருப்பு நேரம் 464 வினாடிகளாக இருந்தது. இப்போது அது 150 வினாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, FASTag போன்ற மின்னணு கட்டணம் செலுத்தும் முறைகள் காரணமாக மக்களுடைய பொன்னான நேரம் மிச்சமாகிறது.

ALSO READ: FASTag குறித்த குழப்பமா? உங்கள் முக்கிய கேள்விகளுக்கு பதில் இங்கே!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News