அமேசான் பாணியில் பிளிப்கார்ட்: மக்களுக்கு ஜாலி!!

Last Updated : Oct 5, 2017, 01:49 PM IST
அமேசான் பாணியில் பிளிப்கார்ட்: மக்களுக்கு ஜாலி!! title=

பிளிப்கார்ட்டின் "ஃபெஸ்டிவ் தமாக்கா சேல்" சிறப்பு விற்பனை இன்று முதல் நடைபெறுகிறது. பிளிப்கார்ட் தொடர்ந்து பல பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனைகளை வழங்கி வருகின்றது. அதன் அடிப்படையில் இந்த மாதம் இறுதியில் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி மீண்டும் சிறப்பு சலுகை விற்பனையினை அறிவித்துள்ளது.

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கிகளின் கார்டுகளை கொண்டு வாங்கும் போது கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 
அதேபோல் தேர்வு செய்யப்பட்ட சாதனங்களுக்கு சிறப்பு விற்பனையில் எக்சேஞ்ச் சலுகை, வட்டியில்லா மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் லேப்டாப், டேப்லெட், ஹெட்போன்ள், கேமரா போன்ற சாதனங்களுக்கும் தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு வழங்கப்படுகிறது. 

பிளிப்கார்ட் தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் எவை:-

ஆப்பிள் ஐபோன் 8 (64 ஜிபி):

* பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 8 (64 ஜிபி) மாடல் ரூ.59,999 விலையில் கிடைக்கிறது.

* பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.20,000 வரை தள்ளுபடி.

லெனோவோ K8 பிளஸ் 32ஜிபி:

* லெனோவோ K8 பிளஸ் 32 ஜிபி மாடல் விலை ரூ.1,500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.9,499க்கு வழங்கப்படுகிறது. 

* பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.9,000 வரை தள்ளுபடி.

ரெட்மி நோட் 4 (4ஜிபி):

* சியோமி ரெட்மி நோட் 4 (4ஜிபி) ஸ்மார்ட்போனின் விலை ரூ.2000 வரை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.10,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

மோட்டோ:

* மோட்டோரோலாவின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான மோட்டோ சி பிளஸ் (16 ஜிபி) ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளது. 

* மோட்டோ சி பிளஸ் ரூ.5,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

* மோட்டோ ஜி5 பிளஸ் (32 ஜிபி) ஸ்மார்ட்ரோனின் விலை ரூ.4000 வரை குறைக்கப்பட்டு ரூ.12,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

பிளிப்கார்ட்டில் இன்று துவங்கியுள்ள சிறப்பு விற்பனை அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. 

Trending News