டாடா மோட்டார்ஸ் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி: டாடா மோட்டார்ஸ் தனது புதிய மின்சார காரை ஏப்ரல் 6 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. Tata Nexon EV மற்றும் Tata Tigor EV க்குப் பிறகு, நிறுவனத்தின் இந்த காருக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நிறுவனம் சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கில் இது குறித்த ஒரு டீஸரைப் பகிர்ந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் இந்த டீசரை மிகவும் வலுவான டேக் லைனுடன் பகிர்ந்துள்ளது. மாற்றம்தான் எல்லாம், மாற்றம் வலிமையானது, மாற்றம் வலுவானது, மாற்றத்தை அங்கீகரிக்கவும் என்று நிறுவனம் எழுதியுள்ளது. டாடாவின் இந்த புதிய எலக்ட்ரிக் கார் 6 ஏப்ரல் 2022 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. டாடா நெக்ஸான் EV நீண்ட ரேஞ்ச் கொண்ட காராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், டீசரில் அதிக தகவல்கள் வெளியாகவில்லை.
டீசரில் காரின் முன்பக்க தோற்றம் வெளியாகியுள்ளது
டீசரில் வாகனத்தின் முன் தோற்றம் காட்டப்பட்டுள்ளது. எனினும், அதைப் பார்த்து இது எந்த மாடல் என்று சொல்வது கடினம். டீசரில் காருடன் கார்பன் ஃபைபர் மற்றும் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் பேனல்கள் காணப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த புதிய மாடலில் சில சிறப்புகளை சேர்க்கும் பணியை டாடா செய்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இது பற்றிய கூடுதல் விவரங்கள் தெரியவரும்.
Embrace what lies beyond the unknown and #DiscoverDifferent
Watch Our Brand-New Electric SUV Concept on 06.04.2022 at 12PM IST
Know more: https://t.co/9509vNm7Q9#EvolveToElectric pic.twitter.com/vTVWpXUM9E
— Tata Passenger Electric Mobility Limited (@Tatamotorsev) April 2, 2022
மேலும் படிக்க | Tata Neu டாடா நிறுவனத்தின் ஒற்றை செயலியில் கார் முதல் விமானப் பயணம் வரை
மார்ச் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் விற்பனை 30% அதிகரித்துள்ளது
2022 மார்ச் மாதத்தில் மொத்த உள்நாட்டு விற்பனை 30 சதவீதம் அதிகரித்து 86,718 யூனிட்டுகளாக இருந்ததாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. ஓர் ஆண்டுக்கு முன்னர் இதே காலத்தில் இது 66,462 ஆன இருந்தது. மார்ச் 2021 இல் 29,654 யூனிட்களாக இருந்த அதன் பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை கடந்த மாதம் 43 சதவீதம் அதிகரித்து 42,293 யூனிட்களாக அதிகரித்துள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸின் வர்த்தக வாகன விற்பனை மார்ச் மாதத்தில் 47,050 ஆக இருந்தது, இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 40,462 ஆக இருந்தது.
நிறுவனத்தின் பயணிகள் வாகனப் பிரிவின் நிர்வாக இயக்குநர் ஷைலேஷ் சந்திரா ஒரு அறிக்கையில், வலுவான தேவை மற்றும் விநியோகத் தரப்பில் விழிப்புணர்வுடன் செயல்படுவதால், எங்களின் புதிய வரம்பில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆண்டு, காலாண்டு மற்றும் மாதாந்திர விற்பனையை பதிவு செய்துள்ளோம். 2021-22 நிதியாண்டில் டாடா மோட்டார்ஸின் விற்பனை 3,70,372 யூனிட்டுகளாக இருந்தது, இது முந்தைய 2020-21 நிதியாண்டை விட 67 சதவீதம் அதிகம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | அட்டகாசமான புதிய Yamaha MT15க்கான முன்பதிவுகள் ஆரம்பம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR