அலாய் வீல்களுடன் சந்தைக்கு வரப்போகும் டாடா நெக்ஸான் எஸ்யூவி

அலாய்வீல்களுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட நெக்ஸான் எஸ்யூவி எலக்டிரிக் காரை டாடா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 1, 2022, 05:22 PM IST
  • டாடா நிறுவனத்தின் நெக்ஸான் எஸ்யூவி எலக்டிரிக் கார்
  • மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் விரைவில் அறிமுகம்
  • பாதுகாப்பு மற்றும் அட்வான்ஸ் தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம்
அலாய் வீல்களுடன் சந்தைக்கு வரப்போகும் டாடா நெக்ஸான் எஸ்யூவி

டாடா மோட்டார்ஸ் விரைவில் அதன் பிரபலமான எலக்ட்ரிக் எஸ்யூவி நெக்ஸான் எலக்டிரிக் காரை மேம்படுத்தி சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. காரின் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடைபெற்றபோது அதன் புகைப்படங்கள் மார்க்கெட்டில் லீக்கானது.  இதில் SUV புதிய அலாய் வீல்கள் மற்றும் பின்புற சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகளுடன் காணப்பட்டது.  ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்ற இந்த மாடல் கார்கள், மேம்படுத்தப்பட்ட பிறகு அறிமுகமாகும்போது இன்னும் அதிக வரவேற்பை பெறும் என டாடா நம்பிக்கையில் உள்ளது. 

மேலும் படிக்க | கிரீன் ஹைட்ரஜனில் இயங்கும் நிதின் கட்கரியின் புதிய கார்! அசத்தலான சிறப்பம்சங்கள்

Nexon EV 40 KW பேட்டரி 

Nexon EV இப்போது 40 kW-r பேட்டரி பேக்கப்புடன் வரவுள்ளது, இது தற்போதைய பேக்கை விட 10 kW-r அதிகமாக இருக்கும் என தெரியவந்துள்ளது. சமீபத்தில், இந்த கார் புனேவில் சோதனை செய்யப்பட்டது.  அந்த மாடலில் இடம்பெற்ற எலக்டிரிக் காரில் இட்டை பீம் LED ஹெட்லேம்ப்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய LED DRLகளுடன் காணப்பட்டது. இது தவிர, எலக்ட்ரிக் எஸ்யூவிக்கு புதிய தோற்றத்தை அளிக்க, நிறுவனம் 16 இன்ச் டூயல்-டோன் டைமண்ட்-கட் அலாய் வீல்களை அதில் பொருத்தியுள்ளது.

Naxon EV ஆட்டோ ஹெட்லேம்ப்கள்

தற்போதைய மாடலில் இருந்து புதுப்பிக்கப்பட்ட மாடலின் உட்புறங்களில் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்கள் மற்றும் தளவமைப்புகளைக் காணலாம். போட்டியைக் கருத்தில் கொண்டு நிறுவனம் சில அம்சங்களைச் சேர்த்திருக்கலாம். குறிப்பாக, ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் இது போன்ற பல அம்சங்கள் Nexon EV இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு பற்றி பேசுகையில், புதிய மாடல் EBD, ISOFIX உடன் ABS, முன்பக்கத்தில் இரண்டு ஏர்பேக்குகள், கார்னர் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் பல அம்சங்களைப் பெற உள்ளது. மேலும், பயணக் கட்டுப்பாடு மற்றும் பார்க் மோட் ஆகியவையும் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | கம்பீரமான தோற்றத்தில் குறைந்த விலையில் களமிறங்கியிருக்கும் ரெனால்ட் கிகர்

காரின் வேகம்

தற்போதைய Tata Nexon EV உடன், நிறுவனம் நிரந்தர ஒத்திசைவான காந்தத்துடன் வரும் 30.2 kWh-R லித்தியம்-அயன் பேட்டரி பேக்கை வழங்கியுள்ளது. காரின் வரம்பு 312 என ARAI கூறுகிறது. சாலையில் முழு சார்ஜ் செய்தால் 300 கிமீ வரை ஓட்ட முடியும். இந்த பவர்டிரெய்ன் 125 பிஎச்பி பவரையும், 245 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. இதுதவிர இன்னும் சில கூடுதல் தொழில்நுட்பங்களும் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News