Good News: 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டைலாக திரும்பி வந்துள்ளது Nokia 6310!!

நோக்கியா சமீபத்தில் தனது கிளாசிக் தொலைபேசிகளை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது நோக்கியா 20 ஆண்டு பழமையான தனது தொலைபேசியின் கிளாசிக் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 27, 2021, 06:43 PM IST
  • நோக்கியா 6310 மீண்டும் சந்தையில் வந்துள்ளது.
  • இந்த தொலைபேசியின் விலை 40 யூரோக்கள் அதாவது சுமார் 3,500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இந்த தொலைபேசிக்கு பவர் கொடுக்க, 1150 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
Good News: 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டைலாக திரும்பி வந்துள்ளது Nokia 6310!! title=

நோக்கியா சமீபத்தில் தனது கிளாசிக் தொலைபேசிகளை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது நோக்கியா 20 ஆண்டு பழமையான தனது தொலைபேசியின் கிளாசிக் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய நினைவுகளை புதுப்பித்துக் கொள்ளலாம்.

நோக்கியா 6310 (Nokia 6310) மீண்டும் சந்தையில் வந்துள்ளது. HMD Global நவீன அம்சத்துடன் இந்த தொலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது. எச்.எம்.டி குளோபல் நோக்கியா பிராண்டிற்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் உரிமம் பெற்றது. அதன் பின்னர் நிறுவனம் புதிய அவதாரத்தில் தொலைபேசியை அறிமுகப்படுத்துகிறது. Nokia 6310-இன் விலை மற்றும் அம்சங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த தொலைபேசி முதன்முதலில் 2001 இல் அறிமுகம் ஆனது. ஒரிஜினல் தொலைபேசியில் கேண்டி பார் வழங்கப்பட்டது. 2021 இல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட தொலைபேசியிலும் அதே போன்ற கேண்டி பார் உள்ளது. புதிய Nokia 6310-வில் கலர் டிஸ்பிளே உள்ளது. இது முன்பு அறிமுகமான வகையில் உள்ளதை விட பெரியதாக உள்ளது. இந்த தொலைபேசியில் பின்புற கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ:Nokia C20 Plus: வெறும் ரூ.8000-ல் அறிமுகம் ஆனது அட்டகாச ஸ்மார்ட்போன்

Nokia 6310 (2021) விலை

இந்த தொலைபேசி (Mobile Phone) தற்போது வெளிநாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த தகவல்கள் கொடுக்கப்படவில்லை. இந்த தொலைபேசியின் விலை 40 யூரோக்கள் அதாவது சுமார் 3,500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கருப்பு, அடர் பச்சை, வெளிர் நீலம் மற்றும் மஞ்சள் வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Nokia 6310 (2021) இன் அம்சங்கள்

நோக்கியா 6310 2.8 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. தொலைபேசியில் 8MB ரேம் மற்றும் 16MB இன்-பில்ட் ஸ்டோரேஜ் உள்ளது. தொலைபேசி சீரிஸ் 30+ இயக்க முறைமையுடன் வருகிறது. பின்புறத்தில் 0.3 மெகாபிக்சல் பின்புற கேமரா உள்ளது, இது எல்இடி ப்ளாஷ் உடன் வருகிறது. நோக்கியா 6310 இல் டூத் 5.0, வைஃபை, டூயல் சிம் ஆதரவு மற்றும் எஃப்எம் ரேடியோ போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த தொலைபேசிக்கு பவர் கொடுக்க, 1150 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. அதன் பேட்டரியை அகற்றும் வசதியும் உள்ளது. தொலைபேசி பெட்டியில் சார்ஜர் மற்றும் யூ.எஸ்.பி கேபிள் ஆகியவை கிடைக்கின்றன.

ALSO READ: அசத்தல் அம்சங்கள், அதிரடி விலையில் அறிமுகமாகவுள்ளன Nokia G10, G20: முழு விவரம் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News