நயின் சிங் ராவத்தின் 107-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் விதமாக கூகுள் தனது முகப்பு பக்கத்தில் டூடுளை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய இமாலய பனிமலையை அளந்தவர் நயின் சிங் ராவத். இமயத்தை அளவிடும் இமாலயப் பணிக்காக, தேர்ந்தெடுக்கப் பட்ட இருவரில் ஒருவர் தான் இவர்.
இதற்காக தக்க பயிற்சிகள் இவருக்கு அளிக்கப்பட்டது. ஒரே சீரான வேகத்தில் நடக்கப் பயிற்சி, சமதரையாக இருந்தாலும், மலைப் பகுதியாக இருந்தாலும், ஒரே வேகத்தில் நடப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
நடக்கும் பொழுது தூரத்தைக் கணக்கிட கையில் ஜெபமாலை வைத்துக் இவ்விதம் இமயத்தை ஒரு வருடம் நடந்து, கணக்கிட்டுக் கொண்டே நடந்தார். இவரின் பணிகளை நிர்வகித்து அளந்தவர் தான் ஜார்ஜ் எவரெஸ்ட். அவரது பெயர் தான் இமயத்தின் உயர்ந்த மலை முகட்டிற்குப் பெயராக பதிக்கப்பட்டது.
நாளடைவில் டேராடூனில், நயின் சிங்கின் பாதைக் கணக்கெடுப்புகள் ஒன்றிணைக்கப் பட்டு, மெல்ல மெல்ல துல்லியமான வரைபடங்களாக உருவம் பெற்றது. 1868- ராயல் புவியியல் அமைப்பானது நயின் சிங்கிற்கு, தங்க முலாம் பூசப்பட்ட கால மாணியை பரிசாக வழங்கிப் பாராட்டியது. புவியியல் இதழானது அவரது சாதனைகளை உலகிற்கு அறிவித்தது.
இம்மாமனிதர் இந்தியாவிலிருந்து நேபாளம் வழியாக திபெத், திபெத்திய நதி சங்போவின் பிரதான பிரிவு ஆகியவற்றின் மூலம் வணிக வழியை மாற்றியமைத்தவர். மேலும் திபெத்தில் அமைந்துள்ள லாசா நகரின் இருப்பிடத்தையும், உயரத்தையும் முதன்முறையாக கண்டறிந்தவர் ஆவார்.
2004 -ம் ஆண்டில் ஜுன் 27-ம் தேதி இந்திய அரசானது, நயின் சிங் நினைவாக, தபால் தலை ஒன்றினையும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.