ஜார்ஜ் மெலிஸின் இயக்கிய படமான தி கான்க்யூஸிட் ஆப் தி போ் திரைப்படம் வெளிவந்த தினத்தை முன்னிட்டு இன்று கூகுள் நிறுவனம் 360 டிகிரி விர்ச்சுவல் ரியாலிட்டி டூடுலை வைத்து அந்த படத்தை கெளரவித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் வெர்ஜீனியா வூல்ஃப் பிறந்தநாள் இன்று. இவர் 20ம் நூற்றாண்டின் நவீனத்துவ எழுத்தாளர்களுள் மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்.
செர்கீ மிக்கைலோவிச் ஐசென்ஸ்டைன், சோவியத் ரஷியாவின் திரைப்பட இயக்குனரும், திரைப்படக் கோட்பாட்டாளரும் ஆவார். இவர் 1898-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி அப்போதைய சோவியத் ரஷியாவின் ஒரு அங்கமாக இருந்த லடிவியா நாட்டின் ரிகா நகரில் பிறந்தார். இவரது தந்தை மிக்கைல் ஒசிபோவிச் ஐசென்ஸ்டைன் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர், தாயார் ஜூலியா இவனோவ்னா ரஷியாவை சேர்ந்தவர்.
நயின் சிங் ராவத்தின் 107-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் விதமாக கூகுள் தனது முகப்பு பக்கத்தில் டூடுளை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய இமாலய பனிமலையை அளந்தவர் நயின் சிங் ராவத். இமயத்தை அளவிடும் இமாலயப் பணிக்காக, தேர்ந்தெடுக்கப் பட்ட இருவரில் ஒருவர் தான் இவர்.
இதற்காக தக்க பயிற்சிகள் இவருக்கு அளிக்கப்பட்டது. ஒரே சீரான வேகத்தில் நடக்கப் பயிற்சி, சமதரையாக இருந்தாலும், மலைப் பகுதியாக இருந்தாலும், ஒரே வேகத்தில் நடப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இன்று இந்தியா முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆசிரியர் சிறப்பு தினத்தை கொண்டாடும் விதமாக் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை கொண்டு தனது முகப்பை அலங்கரித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. 1888-ம் ஆண்டில் பிறந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் தனது முதல் பக்கத்தில் உள்ள கூகுள் டூடுலில் இந்திய சின்னத்தை இடம்பெறச் செய்துள்ளது.
விடுமுறை தினங்கள், உலக நிகழ்வுகள், சாதனை செய்த மனிதர்களை கொண்டாடும் விதமாக் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் கூகுள் டூடுலில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் இன்று 71-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கூகுள் நிறுவனம் தனது டூடுலில் இந்திய தேசியப் பறவையான மயில் இருபுறமும் வீற்றிருக்க, அதற்க்கு நடுவில் அசோகச் சக்கரமும், மேலே பாராளுமன்றம் கட்டிடம் இடம்பெற்றுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.