கூகிள் குரல் தேடல் இன்னும் 8 மொழிகளில் பயன்படுத்தலாம் என கூகிள் நிறுவனம் இன்று (ஆகஸ்ட் 14) அறிவித்துள்ளது.
அதன்படி கூகிள் குரல் தேடல் மூலம் இனி இந்தியாவில் பேசப்படும் மொழிகளான பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, தமிழ், தெலுகு மற்றும் உருது என 8 இந்திய மொழிகளில் பயன்படுத்தலாம்.
இந்த வசதியை பயனர் பயன்படுத்த முதலில் "voice" அமைப்பில் மொழியினை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் தேர்வு செய்த மொழியினில் குரல் தேடல் மூலமும், க்போர்ட்(Gboard) வசதியையும் பயன்படுத்தலாம்.
இந்த வசதியானது தற்போது ஆண்டிராய்ட் மற்றும் ஐஒஎஸ் என இரண்டு தளத்திலும் பயன்படுத்த முடியும்.
விரைவில் இந்த வசதி கூகிள் ட்ரான்ஸ்லேட் -லும் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளனர்.