இன்றைய காலகட்டத்தில், அனைவருக்கும் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, பான் கார்டு மற்றும் மொபைல் எண் போன்றவற்ற்டன் ஆதார் அட்டையை இணைப்பதும் கட்டாயம் என்ற விதியும் அமலில் உள்ளது. வங்கியில் வேலை முதல், வேலையில் சேர, கல்லூரியில் சேர, அரசு திட்டங்களின் பலனைப் பெற என எல்லா வகையிலும் தேவை. அட்டைதாரரின் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் போன்ற அனைத்து வகையான தகவல்களும் ஆதாரில் உள்ளன.
வீடு மாறுதல், வேலை மாற்றலாகி செல்லுதல் போன்ற பல காரணங்களுக்காக ஆதாரில் தங்கள் முகவரியை மாற்ற வேண்டிய அல்லது புதுப்பிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் . அத்தகைய சூழ்நிலையில், சம்பந்தப்பட்ட நபர் தனது ஆதார் அட்டையில் புதிய முகவரியை புதுப்பிக்க வேண்டியது அவசியம். இதைச் செய்யாவிட்டால், எதிர்காலத்தில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம். எனவே உங்கள் முகவரியை எவ்வாறு புதுப்பிக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஆதாரில் புதிய முகவரியை ஆன்லைன் அல்லது நேரிடையாக மையத்திற்கு சென்று புதுப்பிக்கலாம்
ஆஃப்லைன் முறை
1. உங்கள் ஆதார் அட்டையில் புதிய முகவரியையும் அப்டேட் செய்ய விரும்பினால், இதற்கு அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும்.
2. ஆதார் சேவை மையத்தில் உங்கள் ஆதார் அட்டையில் திருத்த வேண்டிய தகவலை நிரப்பும் திருத்தப் படிவத்தை பெற்றுக் கொண்டு, அதில் தேவையான தகவல்களை நிரப்ப வேண்டும்.
3. உங்கள் பெயர், ஆதார் எண் மற்றும் முகவரி போன்ற புதுப்பிக்கப்பட வேண்டியவற்றை நிரப்ப வேண்டும்.
4. இதற்குப் பிறகு, நீங்கள் பொருத்தமான ஆவணங்களை படிவத்துடன் இணைக்க வேண்டும். அதாவது புதிய முகவரியை உறுதிபடுத்தும்ஆவணம்.
5. பின்னர் நீங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை சந்தித்து உங்கள் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை புதுப்பிக்க வேண்டும் என்று கூற வேண்டும்.
6. இதற்குப் பிறகு உங்கள் கைரேகைகள் உள்ளிட்ட பயோமெரிக் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு ஆவணம் சரியாக இருந்தால் முகவரி புதுப்பிக்கப்படும்.
மேலும் படிக்க | ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்ற வேண்டுமா... UIDAI விதிகள் கூறுவது என்ன
ஆன்லைன் முறை
1. உங்கள் ஆதார் அட்டையில் உள்ள முகவரியையும் மாற்ற விரும்பினால், இந்த வேலையை வீட்டில் இருந்த படியே ஆன்லைனிலும் செய்யலாம்.
2. இதற்கு நீங்கள் UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://myaadhaar.uidai.gov.in/ என்ற முகவரிக்கு சென்று இங்கே உள்நுழை என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
3. பிறகு உங்கள் ஆதார் எண் மற்றும் திரையில் கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சா குறியீட்டை நிரப்ப வேண்டும்.
4. பின்னர், பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP வரும், அதை பூர்த்தி செய்து உள்நுழையவும்.
5. இப்போது நீங்கள் 'அட்ரஸ் அப்டேட்' என்பதைக் கிளிக் செய்து, 'அப்டேட் ஆதார் ஆன்லைன்' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
6. பிறகு, உங்கள் புதிய முகவரியை நிரப்பி அதன் ஆவணங்களை இணைத்து, பின்னர் பணம் செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | Aadhaar Card: ஆதார் அட்டையில் இத்தனை வகைகளா... உங்களுக்கு ஏற்றது எது...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ